
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான
பத்துமலை,பிப்.7-
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான 13-ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 5 பிப்ரவரி திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
இப்பட்டமளிப்பு விழா பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் மேற்பார்வையில் இனிதே நடந்தேறியது. ஆசிரியர் குமாரி ரஜீவி வீரன் ஆறாம் ஆண்டு ஆசிரியர்கள் துணையுடன் இவ்விழாவை ஒருங்கிணைத்துக் கோலாகலமாக வழிநடத்தினார்.
இப்பட்டமளிப்பு விழாவை ஆசிரியர்கள் திரு. முருகன் ரெங்கநாதன் மற்றும் சுபத்ரா தேவி சண்முகம் ஆகியோர் அறிவிப்பாளர்களாக வழிநடத்தினர். ஆறாம் ஆண்டு மாணவி பாரதி மாதவன் பாடிய இறைவாழ்த்துடன் இந்நிகழ்வு தொடங்கியது.

ஆ றாம் ஆண்டு மாணவர்கள் பட்டமளிப்பு ஆடையணிந்து இசையொலியுடன் மண்டபத்தினுள்ளே சபையோர் வியக்க நடந்து வந்து சிறப்பு இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து, நிகழ்வின் சிறப்பு விருந்தினரான பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ஹரிராஜா தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.விக்னேஸ்வரன் நடராஜன், நிர்வாகத் துணைத்தலைமையாசிரியர் திருமதி சித்ரா தேவி ராமசாமி, மாணவர்நலத் துணைத் தலைமையாசிரியர் திரு விக்டர் ஆசீர்வாதம், இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர் திருமதி விஜயலட்சுமி பக்கிரி, மாலை நேரத் துணைத்தலைமையாசிரியர் திருமதி கோமதி தம்புசாமி மற்றும் ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் படை சூழ குத்துவிளக்கு ஏற்றியபின் மேடையின் சிறப்பு இருக்கையில் அமர்ந்தார்.
தொடர்ந்து, தேசிய கீதம், மாநில கீதம், பள்ளிப் பாடல் ஒலிக்கப்பட்டது. பரதத்துடன் தொடங்கிய இவ்விழா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு ஹரிராஜா தட்சிணாமூர்த்தி வரவேற்புரையாற்றி வருகையாளர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் சிறப்புரையை ஆற்றி 13-வது பட்டமளிப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறப்பு செய்தார்.

இந்நிகழ்வின் உச்சக்கட்டமாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு ஹரிராஜா தட்சிணாமூர்த்தி மாணவர்களுக்கான நற்சான்றிதழை முறையே எடுத்து வழங்கினர். ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்கள் திருமதி புனிதா சுகுமாறன், திருமதி லெட்சுமி கோதண்டபாணி, திருமதி பரமேஸ்வரி கிருஷ்ணன், திருமதி கோகிலவாணி கன்னியப்பன், திருமதி பிரேமா லெட்சுமணன் மற்றும் இந்திரா ஜெகநாதன் ஆகியோருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் அவர்கள் நற்சான்றிதழ் மற்றும் பூங்கொத்தினை வழங்கி கௌரவித்தார்.
இறுதியாக, 13ஆவது பட்டமளிப்பு விழாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை குமாரி ரஜீவி வீரன் பள்ளி அளவிலான பட்டமளிப்பு விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற உதவிய பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் அறங்காவலர் தான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா, பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



