YB YUNESWARANMalaysiaPolitics

வழிபாட்டுத் தலங்களுக்குத் தனி, சிறப்பு பதிவாளர் தேசிய ஒற்றுமை அமைச்சின் புதிய முன்னெடுப்பு துணையமைச்சர் YB யுனேஸ்வரன் ஆதரவு

கோலாலம்பூர், மார்ச் 5-
மலேசியாவில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், அவற்றுக்கென ஒரு சிறப்புப் பதிவாளர் (Special Registrar) முறையை உருவாக்கத் தேசிய ஒற்றுமை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக ஒற்றுமை துணையமைச்சர் YB யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார். அரசியலமைப்பின்படி நிலம் மற்றும் மதம் தொடர்பான விவகாரங்கள் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றிய போது துணையமைச்சர் யுனேஸ்வரன் இத்தகவலைத் தெரிவித்தார். மேலும், வழிபாட்டுத் தலங்கள் கட்டுமானப் பணிகளுக்கு முறையான திட்டமிடல் அனுமதியைப் பெற வேண்டியதன் அவசியத்தையும் யுனேஸ்வரன் வலியுறுத்தினார். மதங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பொதுவெளியில் சர்ச்சையாக்காமல், ரகசிய பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்தியஸ்தம் (Mediation) மூலம் தீர்க்க ‘ஜேகே ஹார்மோனி’ (JK Harmoni) குழு தீவிரமாகச் செயல்படும் என்றும் யுனேஸ்வரன் உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button