
நகரத்தின் பரபரப்பான அந்தப் பகுதியில் வானளாவிய அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் எப்போதும் இயந்திரங்களின் இரைச்சலையும் மனிதர்களின் அவசரப் பேச்சுக்களையும் உள்வாங்கிக்கொண்டு சத்தமாகவே இருந்தன. ஆனால், ஐந்தாவது மாடியின் ஒரு குறிப்பிட்ட கதவைத் திறந்தால், அங்கே காலம் உறைந்து போய் கிடப்பது போன்ற ஒரு விசித்திரமான மௌனம் நிலவும். ஜன்னல் திரைச்சீலைகளுக்கு இடையே மெலிதாகத் தப்பி வரும் சூரியக்கதிர்கள். அந்த அறையின் தூசி துகள்களைத் தழுவிச் செல்ல, அங்கே பத்து வயது கண்மணி தரையில் அமர்ந்திருந்தாள். ஆனால், அவளது உலகம் மௌனத்தால் ஆனது. ‘ஆட்டிசம்’ எனும் எனும் ஒரு சிக்கலான நிலையில் இருந்து அவளால் மற்றவர்களிடம் பேச முடியாது. உலகத்தையே தன் கண்களால் உற்றுப் பார்த்து அதைத் தன் ஓவியங்கள் வழியாகப் பதிவு செய்யும் ஒரு திறமையான சிறுமி அவள். அவளது அம்மா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர். குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக காலையில் சென்று இரவு நேரத்தில்தான் திரும்புவார்.ஒரு தந்தை என்ற ஆதரவு இல்லாத அந்தப் பிள்ளைக்கு அம்மாவே உலகம். கண்மணிக்கு அம்மாவின் மௌனமான அருகாமை மிகுந்த ஆறுதலைத் தந்தது. அம்மா வேலைக்குச் சென்ற பிறகு, கண்மணியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வாசுகிதான். அவரும் அந்தக் கட்டணத்தில் வசிப்பவர் தான். வாசுகி ஒரு விதவை. அவருக்கு ஒரு பையன் மட்டும் இருக்கிறான். அந்தப் பையன் கண்மணியை ஒரு தங்கையாகவே கருதிப் பார்த்துக் கொண்டான். ” கண்மணி இன்று என்ன வரைந்திருக்கிறாய்?” என்று கனிவாகக் கேட்பார் வாசுகி. அவள் பேச முடியாது ஆனால் அவள் கண்களில் ஒரு மெல்லிய புன்னகை மின்னும். வாசுகி அன்பான அரவணைப்பும் அந்தப் பையனின் விளையாட்டுகளும் கண்மணிக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்தன. ஒரு நாள் , கண்மணிக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது. பள்ளிக்கு விடுமுறை எடுத்தாள். கண்மணி அம்மா அவளைப் படுக்கையில் படுக்க வைத்து, மருந்து கொடுத்தார். வாசுகி வழக்கம்போல கண்மணி பார்க்க வீட்டிற்கு வந்ததும் ” பாப்பாக்கு உடம்பு சரியில்லை, நான் மருந்து எல்லாம் கொடுத்துட்டேன், அவள் ரெஸ்ட் எடுக்கிறாள். நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க வாசுகி ” என்று கண்மணி அம்மா கூறிவிட்டு வேலைக்குச் சென்றார். வாசுகியும் கண்மணியை நல்ல படியாக கவனித்து கொண்டார். மறுநாள், பள்ளிக்குச் சென்ற கண்மணி பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் அமைதியாகவே இருந்தாள். வீட்டிற்கு வந்ததும் வாசுகியிடம் ஓர் ஓவியத்தை வரைந்து காட்டினாள். அந்த ஓவியம் ஒரு நான்கு மனிதன் படம் வரைந்து கிறுக்கி வைத்தது போல இருந்தது. வாசுகி ” என்ன இது கண்மணி? ரொம்ப குழப்பமா வரைஞ்சிருக்க?” என்று கேட்டார். கண்மணி அந்தப் படத்தை பார்த்து வாசுகியிடம் ஏதோ ஒன்று கூறுவதற்கு முயற்சி எடுக்கிறாள். அதுவும் மிகக் கோபத்துடன் வெளிப்படுத்துகிறாள். இதுவரை அவள் அந்த மாறி கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. அதனால் வாசுகி அந்த ஓவியத்தை கவனிக்க தவறிவிட்டு கண்மணியை சமாதானப்படுத்த முயற்சித்தார். ” சரி….சரி …கண்மணி நீங்க அழகாக வரைந்திருக்கிங்க…சரி அந்தப் படத்தை அங்க வையுங்க..நாம் சாப்படலாம்” என்று வாசுகி கூறி கண்மணிக்கு உணவு ஊட்டினார். கண்மணி சோறு தள்ளி விட்டு மிகக் கோபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள். அதனால், வாசுகி கண்மணியை சமாதானம் படுத்தி தூங்க வைத்தார். அடுத்த இரண்டு நாட்களாக, கண்மணி அனைவரையும் கண்டால் பயந்து ஓடினாள். யாரோ தன்னைத் துரத்துவது போன்ற ஒரு பயம் அவளது கண்களில் இருந்தது. அவள் பள்ளி முடிந்ததும், பள்ளி பேருந்துயிலிருந்து தான் வீட்டிற்கு வருவாள். எப்பொழுதும் வாசுகி தான் அபார்ட்மெண்ட் கீழே அவளுக்காக காத்திருந்து கூட்டி கொண்டு வீட்டிற்கு வருவாள். வழக்கம் போல, அப்படித்தான் கண்மணி பள்ளி பேருந்துயிலிருந்து இறங்கி வாசுகிற்குக் காத்திருந்தாள். வாசுகி கண்மணிக்கு மதியம் உணவிற்கு சமைத்து கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதம் ஆனது. அதனால் அவள் வாசுகி வராததைக் கண்டு, படிக்கட்டில் தனியாக ஏறத் தொடங்கினாள். திடீரென ஒரு பலத்த பொருள் விழும் சத்தம். அந்த நகரத்தில் நடமாறிக்கொண்டிருந்த மக்கள் வட்டமாக ஒன்று கூடின. ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள் கண்மணி. அக்குடியிருப்பு முழுவதும் ஒரு பெரும் சோகம் சூழ்ந்தது. கண்மணி அம்மாக்குத் தெரிய வந்தது. கதறி அழுத அம்மாவின் குரல் விண்ணைப் பிளந்தது. வாசுகி ” என்னால் தான் இப்படி நடந்து விட்டது… அந்தப் பிள்ளையைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று கூறி தன் குற்றவுணர்வால் துடித்துப் போனார். வாசுகி பையன் தன் அம்மாவை சமாதானம் படுத்தினான். இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரேதப் பரிசோதனை ‘postmortem’ அறிக்கை போலீசாரின் கையில் கிடைத்தபோது, அந்த அறையே அமைதியாக உறைந்தது. மருத்துவர் சுட்டிக்காட்டிய அந்த அதிர்ச்சியான உண்மை, கண்மணி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்பதை உறுதி செய்தது. இந்தத் தகவலைக் கேட்ட கண்மணி அம்மா மனம் உடைந்து போனார் . வாசுகி உலகம் தலைகீழாக மாறியது. “அந்தப் பிள்ளை என் பொறுப்பில்தானே இருந்தாள்…எப்பொழுதும் என் கண்முன்னேதானே இருப்பாள்? நான் தவறு செய்து விட்டேன்… என்னால் தானே இப்படி நடந்தது…ஐயோஓஓஓ கடவுளே….” என்று கூறி அந்தக் குற்ற உணர்ச்சி அவரைப் பாடாய் படுத்துவதால் கதறி அழுகிறார். துக்கம் ஒருபுறம் இருந்தாலும், கண்மணிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று வாசுகி துடித்தார். ஒருபுறம் போலீஸ் கண்டுபிடிக்க மறுபுறம் வாசுகி கண்டுபிடிக்கிறாள். கண்மணி கடைசியாக வரைந்த ஓவியங்களையும், அவள் தங்கியிருந்த அறையையும் அவர் துருவித் துருவி ஆய்வு செய்தார். அங்கே கண்மணி வரைந்திருந்த ஓவியங்கள் எல்லாம் பார்த்தால் அதில் ஓர் ஓவியம் அவர் கண்களை உறைந்து போகச் செய்தது. அதில் நான்கு உருவங்கள் வரையப்பட்டிருந்து கிறுக்கிருந்தாள். அந்த உருவங்களைப் பார்த்ததும், அன்று நடந்த சம்பவங்களை யோசித்து பார்த்தார். பிறகு, சில நாட்களுக்கு முன்பு பிளேக்ரவுண் திடலில் அந்தச் சிறுவர்கள் சிலரைப் பார்த்தபோது கண்மணி காட்டிய பயம் வாசுகிக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. அந்தப் பிளேக்ரவுண் திடலில் நான்கு பையன்களும் அதே குடியிருப்பில் வசிப்பவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். சந்தேகம் தீர்க்கவே வாசுகி நேராக அவர்களைத் தேடிச் சென்றார். அந்தப் பையன்கள் குடியிருப்பு மொட்ட மாடியில் மதுபானம் குடித்துக்கொண்டிருந்தனர். ” நீங்கள்தானே என் கண்மணியை இப்படி செய்தீர்கள்?” என்று அவர் ஆவேசகமாகக் கேட்க, அதற்கு அவர்கள் மறுத்தனர். ஆனால், வாசுகி விடவில்லை, ” எனக்குத் தெரியும் நீங்கதான் இப்படி பண்ணீங்க…இருங்க இப்போதே நான் போலீசாரிடம் சொல்லி உங்களைச் சிறைக்கு அனுப்புகிறேன்” என்று அவர் கூறிய போது, அந்தப் பையன்களின் முகத்தில் இருந்த பயம் மறைந்து ஓர் ஏளனமான சிரிப்பு வந்தது. அவர்களின் ஒருவன் ஏளனமாகச் சிரித்துக்கொண்டு சொன்னான், ” போலீசுக்குத்தானே போறீங்க? தாராளமாக போங்க! ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க, இந்தக் குழுவுக்குத் தலைவனே உங்க பையன் தான். நாங்களாவது பரவாயில்லை, உங்க பையன் இதுக்கு முன்னாடியே அவளைக் கேலி பண்ணிருக்கான், வற்புறுத்திருக்கான். அது உங்களுக்குத் தெரியுமா? அவள் உண்மையைச் சொல்லிருவாள் என உங்க பையனுக்குப் பயம் அதான் கொலை பண்ணிட்டான்.” இந்தத் தகவலைக் கேட்ட வாசுகி தலையில் இடி விழந்தது போல இருந்தார். கண்மணி ஏன் சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டாள்? ஏன் அவ்வளவு அமைதியாக மாறினாள்? ஏன் சில நேரத்தில் மிகக் கோவத்தை வெளிப்படுத்துகிறாள்? என்பதற்கான அனைத்து கேள்விகளுக்கு விடை இப்போது தெரியவந்தது. வாசுகி வீட்டுக்குப் பொருள் வாங்க கடைக்குச் செல்லும் நேரத்தில் அல்லது சமயலறையில் வேலை செய்யும் நேரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவரது மகனும் , அவனது நண்பர்களும் சேர்ந்து அந்தச் சிறுமிக்குத் தொடர்ந்து சித்திரவதை கொடுத்து வந்துள்ளனர். அந்த வலி, அந்த தீராத பயம்…அதையெல்லாம் வெளிப்படுத்தவே கண்மணி ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தாள் என்பதை வாசுகி தாமதமாகவே புரிந்துகொண்டார். அன்று மாலை பள்ளி முடிந்து வந்த கண்மணி படிகளில் ஏறி வந்தபோது இந்நேரத்தை தன் வசமாக பயன்படுத்தினான் வாசுகியின் மகன், அந்தப் பெண் உண்மையை அவள் அம்மாயிடம் அல்லது வாசுகியிடம் சொல்லிவிடுவாளோ என்று மிரண்டு போயிருந்தான். வாசுகி பையன் ” இவள் உண்மையைச் சொல்லிடுவாளோ?அப்படி சொல்லிவிட்டால் என் மானம் போகிரும். அதற்கு ஒரே முடிவு தான் கண்மணி இந்த உலகத்தில் இருக்க கூடாது” என்று தனக்குள் பேசினான். கண்மணியின் அந்தப் பார்வையும் கோபமான எதிர்வினைகளும் அவனுக்குப் பெரிய பயத்தை உருவாக்கியிருந்தன. அந்தப் பயமும், தன் தப்பை மறைக்க வேண்டும் என்ற மிருகத்தனமான கண்மணியை கீழே தள்ளிவிடத் தூண்டியது. இதனை அறிந்த வாசுகியின் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. தன் மகன் மீது இருந்த அதீத நம்பிக்கை தவிடுபொடியான நொடி அது. ஆனால், அந்தப் பையன்களைச் சந்திப்பதற்கு முன்பே, கண்மணியின் ஓவியங்களையும் அவளது நடத்தையில் கண்ட மாற்றங்களையும் அனைத்தும் வைத்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். வாசுகியைப் பின்தொடர்ந்து வந்த போலீஸ் படை, மறைந்திருந்து அந்தப் பையன்களின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்திருந்தது. அவர்கள் வாக்குமூலம் அளித்து முடித்த அடுத்த நொடி, போலீசார் வளைத்துப்பிடித்தனர். வாசுகி கண்முன்னே, போதை அடிமையிலிருந்த அந்த இளைஞர்களைப் பிடிக்கப்பட்டன. பிறகு, தன் பெற்ற வளர்ப்பில் குறையிருந்த தன் மகனும் கைவிலங்கிடப்பட்டு நிற்பதைக் கண்டார். தன் மகன் குற்றவாளியாக நிற்பதை பார்த்த வாசுகியின் கண்கள் கலங்கின. அவர் தன் மகனைப் பார்த்து, ” நீ இப்படி ஒரு மிருகமாக இருப்பேனு நான் கனவிலும் நினைக்கவில்லை. உன்னைப் பெற்றதற்கே நான் அசிங்கப்படுகிறேன்! நல்லவேளை, நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை… இல்லனா அந்தப் பிள்ளையும் நீ எப்படி பார்த்திருப்பாயோ?” என்று கதறி அழுந்தார். அவரது குரலில் இருந்த ஆத்திரமும் வேதனையும் அங்கிருந்தவர்களை உலுக்கியது. வாசுகி கண்மணியின் அம்மாவிடம் மன உருகி மன்னிப்பு கேட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வாசுகி மகனுக்கும் அவன் நண்பர்களுக்கும் சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனை கிடைத்தது. ஆனால், கண்மணி அம்மா , வாசுகி, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஓர் உண்மையை உணர்ந்தனர். நடந்தவை அனைத்தையும் சட்டத்தால் தண்டிக்க முடியும் அவை எதிர்காலத்தில் நடப்பவை குறைக்க முடியும். ஆனால், வன்முறைக்கு ஆளான அந்தச் சின்னஞ்சிறு கண்மணி மீண்டும் இந்த உலகத்திற்கு வரப்போவதில்லை. அந்த இழப்பு காலம் கடந்து அழியாத வடுவாக நின்றது.



