
இருள் சூழ்ந்திருந்த வானத்தில் பிரகாசமாக மதியின் ஒளி. அந்த ஒளியை கூட என்னால் இரசிக்க முடியவில்லை. என்னை சுற்றி கடல். நடு பாலத்தில் தனிமையில் நான் . சட்டென்று ஒரு நினைவு. யாரோ கூறியதுபோல் “ இங்கத்தான் நிறைய பேரு தற்கொலை பண்ணிக்கிறாங்கனு சொல்றாங்க”, “ச்சே, இந்த தற்கொலை பண்றவங்கள பார்த்தாலே வெறுப்பாக இருக்கு” என்று என்னுடைய பதில் நினைவுக்கு வந்தது. சிறிய புன்னகை என் முகத்தில். நான் சுதாரித்துக் கொண்டு திரும்பி பார்த்தேன் . என் முன் சக்கரத்தின் வேகம் தெரிந்தது. ஒவ்வொருவரின் வேகம் என்னால் உணர முடிந்தது. ஆனால் அந்த உணர்வு ஓட்டுனருக்காகவா இல்லை என் நெஞ்சிலிருந்து வந்த திக் திக் சத்தத்தின் வேகமா என்று தெரியவில்லை. மறுபடியும் திரும்பினேன். என் கை தானாகவே சத்ததைக் கேட்க ஆசைப்பட்டு என் நெஞ்சு பகுதிக்குச் சென்றது. அதற்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. என் கைகளை கீழே இறக்கி காலின் பக்கத்தில் ஓய்விற்காக வைக்கும்பொழுதுதான் உணர முடிந்தது கால்களின் நடுக்கம். எனக்கு இருந்த உணர்விற்கு பெயர் வைக்க முடியவில்லை. யாரிடமும் பேச மனம் வரவில்லை. மனத்திலும் எண்ணத்திலும் நிறைய கேள்விகள்.என் முன் நின்றிருந்த நிலாவிடம் பேசினேன். அதுவும் என்னை கெட்டவன் என்று நினைத்துவிட்டது போலும் , அமைதியாகவே கேட்டிருந்தது. “நான் ஏன் அப்படி செய்தேன்?…, அம்மா என்ன மன்னிப்பாங்களா? , இந்நேரத்துல என்ன தேட ஆரம்பிச்சிருப்பாங்களா? எனக்கு ஃபோன் பண்ணிருப்பாங்களே! அட ஆமா, நான் தான் ஃபோன் அடைத்து வைச்சிருக்கேனே என்று என்னுள் நிறைய குழப்பம். எனக்கு யாருக்கிடையும் கேட்க தைரியம் வரவில்லை. அது என்னுடைய குற்ற உணர்ச்சியுடைய பிரதிபலிப்பா? இல்லை மற்றவரிடம் கூறி நானே மாற்றிக் கொள்வேன் என்ற பயமா? என் மனம் அறியவில்லை. என் இடது கை கால்சட்டையில் இருக்கும் பையில் இருக்கும் தொலைப்பேசியினை எடுக்க சென்றேன். ஆனால், ஒரு தயக்கம் . எடுக்கவில்லை . பல்லை கடித்துக் கொண்டேன். வேகமாக கத்த முயன்றேன். ஆனால் அதிலும் தோல்வி. ஒரு நிமிட எனக்கு வெறுப்பாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் நின்றிருந்த பாள கம்பத்தில் ஒளிகள் பொருத்தப்பட்டிருந்தது. அதை கொஞ்சம் நேரம் உற்று நோக்கினேன். கண் மட்டுமே வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. ஒரு நிமிடத்தில் என் வாழ்க்கையின் திருப்பம் கண் முன் வந்தது. நான் ஏன் அப்படி செஞ்சேன்? கொஞ்ச நேரம் யோசிச்சிருக்கலா ! ச்சே, இப்போதா மூலையே வேலை செய்யுது… நான் அப்பவே யோசிச்சிருந்தா இப்போ இப்படி ஒரு நிலைமையில இருந்துருக்க மாட்டேன். இப்போ, யோசிச்சு என்ன பண்றது அப்பவே யோசிச்சிடுக்கனும் என்று தலையில் அடித்தப்படியே வாடைக் காற்றிடம் பேசினேன். நெடு நேரம் அந்த வெளிச்சத்தை என்னால் பார்க்க முடியவில்லை. கண்களை மூடி முகத்தை திருப்பினேன். கடல் அலையின் சத்தம் என் செவிகளுக்கு எட்டியது. கண்ணை மூடிக் கொண்டு இயற்கை சத்ததை கேட்க முயன்றேன். அந்த கடல் அலையிலே என் நினைவும் பின்னோக்கி சென்றது. “கொளசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸ்ந்த்யா ப்ரவர்த்ததே” என்ற தெய்வீக பாடல் செவிகளுக்கு வந்தது.இந்த சுப்ரபாதம் என் கனவையும் தூக்கத்தையும் கலைத்தது. ஆனால் என் இரு விழிகளையும் திறக்க முடியவில்லை. என் கைகளோ தொலைப்பேசியைத் தேடிச் சென்றது. இலேசாக கண்களை திறக்க முயன்றேன் என் காதலியின் முகம் . என் முகத்திலோ சிறிய புன்னகை எழுந்தது. நேற்றிரவு நடந்த வீண் சண்டை ஞாபகம் வந்தது. முகத்தை சுளித்துக் கொண்டு தொலைப்பேசியை எடுத்து மேசையில் வைத்து காலை கடன் செய்து முடிக்க சென்றேன். வரவேற்பரையில் என் அம்மாவின் டிக் டாக் சத்தம் கேட்டது. அம்மாவை நோக்கி நடந்தேன். “அம்மா இன்னைக்கு பசியாரை செய்யவில்லையா?” என்று கேட்டேன். உடனே, என் தாயார் “ பசியாரை செய்றதுக்கு வீட்டுல பொருள் எதுவும் இல்லை, இருக்குற பொருள வைச்சு சமைச்சேன் யா”, என்று கூறினார். இந்த உரையாடலிலே அம்மாவின் எதிர்பார்ப்பு உணர முடிந்தது. என்னால் பதில் எதுவும் கூற முடியவில்லை. தலையை இலேசாக ஆட்டிக் கொண்டு சரி என்பதனை குறியீடாக காட்டினேன். அவ்வளவு பசியில் இருந்த எனக்கு அந்த நொடி ஏனோ சாப்பிட தோன்றவில்லை. அப்படியே, வெளியே சென்றேன். சிரித்த முகமாய் இருக்க வேண்டும் என்று நினைத்த அந்த முகத்தில் சோகப் பார்வை மட்டுமே தெரிந்தது. மனத்திலே, மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ட்ரீங்க்…ட்ரீங்க்….ட்ரீங்க்… என்று தொலைப்பேசியின் சத்தமும் அதிர்வும் என் பக்கத்திலுள்ள நாற்காலியின் மேலிருந்து வந்தது. எனக்கு எடுக்க தோன்றவில்லை. என் மூளையில் நிறைய குரல் கேட்டது. ‘ஸ்ட்ரெஸ்’ என்ற சொல்லின் அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது. அவை அனைத்தும் நான் செய்ய வேண்டிய கடமை ஆகும். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எனக்குள்ளே கேள்வி தொடுத்துக் கொண்டு அதற்கு நானே பதிலும் கூறிக் கொண்டேன். என் வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு பத்து நிமட தூரமே. ஆனால், அன்று அந்த பயணம் 10 மணி நேரம் எடுத்தார்ப்போல் இருந்தது. பல குழப்பம் என் மனதில், ஒரு துளி மகிழ்ச்சி இல்லை , வெறுப்பு மட்டுமே இருந்தது. அப்படியே வேலை செய்யும் இடத்திற்கு புலம்பிக் கொண்டு சென்றேன். ஆபிஸுக்கு சென்றதும் என் நண்பன் குமார் “டேய் , நா உனக்கு எவ்வளவு நேரம் கால் பண்றது?” என்று மிரட்டும் தொனியிலே கேட்டான். நான் உடனே “என்னடா ஆச்சு, வண்டி ஓட்டிக்கிட்டு இருந்த அதா எடுக்கல”… முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.”உன்ன பாஸ் பாக்கனும்னு சொன்னாங்க நீ போய் அவர பாரு…” என்றான். நானும் ஒவ்வொரு பாதத்தையும் மெதுவாக எடுத்து வைத்தேன். நடப்பதற்கு கூட என் உடம்பில் தெம்பு இல்லை. அவரின் அறைக்குச் சென்றேன். “சார்…சார்” என்று மெதுவான குரலில் அழைத்தேன். உள்ளிருந்து ஒலி மட்டுமே வந்தது “உள்ள வாங்க”…, என்று அழைத்தார். என் மனத்தில் ஒரு புறம் பதற்றம் , ஒரு புறம் குழப்பம். வெளிக்காட்டவில்லை “ஏன் என்ன கூப்பிட்டிருப்பார்” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டேன். அவர் முன் நின்று மரியாதை நிமித்தமாக “கூட் மோர்னீங் சார்” என்று பணிவாக கூறினேன். அவரின் பதில் “ம்ம்ம்ம்ம்” மட்டுமே. என் கண் தானாகவே அவர் மேசையில் இருந்த என் நெகிழி கோப்பை நோக்கி சென்றது. அதில் உள்ளே நான் செய்து வைத்திருந்த வேலை இருந்தது. அவர் சற்று நேரம் என்னை பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு, என்னுடைய அட்டையே கொடுத்து “ என்ன வேல இது? ஒரு வேலைய கூட சரியா செய்யமாட்டிங்கலா? பொய்டு நல்ல சரிபார்த்துவிட்டு மறுபடியும் செஞ்சு எடுத்துட்டு வாங்க , எனக்கு ஓய்வு நேரத்துக்குல வேணும்” , என்று சத்தம் போட்டுவிட்டு அந்த கோப்பை கொடுத்து விட்டார். “நல்ல வேல… யாருக்கும் வெலங்கல” என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டு கதவை இலேசாக திறந்தான். அறையின் வெளியே குமார் நின்றிருந்தான். என்னை பார்த்தவுடன் “என்னடா இன்னைக்கு ஏசு விழுந்ததா?” உடனே நான் “அது … அது உனக்கு எப்படி தெரிஞ்சது? வெளியே வர கேட்டுச்சா என்ன? என்று திருட்டுப் பார்வைக் கொண்டு கேட்டேன்” , அதற்கு குமார், டேய், இந்த நேரத்துல அவரு கூப்டராருனா கண்டிப்பா ஏசத்தா கூப்பிடுவாரு… கடைசியா நீயும் அவருட்ட ஏசு வாங்கிட்ட.. என்று கேலி தொனியில் கேட்டான். நானும் “ ஆமா டா… மாத்தி கொடுக்க சொல்லிருக்காரு போய் செய்யனும்.”, “சரி விடு பாத்துகலா” என்றான். மனதிற்கு ஒரு ஆறுதலாக இருந்தது. ஒரு சிறு புன்னகை வந்தது என் முகத்தில். அந்த புன்னகை சிரிப்பிலே என் அறைக்கு சென்றேன். அறையை பார்த்ததும் வந்த சிரிப்பும் காணாமல் சென்றது. அறையே ஒரு கோலத்தில் இருந்தது. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேன். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. பொருட்களை எல்லம் அடுக்கி வைத்து விட்டு வேலையை ஆரம்பித்துவிடலாம் . நான் செய்த தாளை எல்லா மறு சோதனை செய்து எந்தவொரு தவறுமின்றி செய்ய ஆரம்பித்தேன். ஒரு பக்கம் வயிறு எரிச்சல் , மயக்கம் , தூக்கம் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இரண்டாக தெரிந்தது. இருந்தும் செய்தேன் , மேலதிகாரிக்கு கொண்டு செல்ல எண்ணினேன். இறுதி முற்றுபுள்ளி வைத்தேன். அச்சிட கொடுத்து விட்டதும் பசியில் நின்றிருந்தேன். சரியாக அப்பொழுது ஓய்வு நேரம். பசியிலியே நின்றிருந்தேன் முதலாளி வரும் வரை. அவருக்கு காத்திருப்பிலே என் இரு கால்களும் வலிக்க தொடங்கின. மனத்திலோ வீட்டு விசயம் ஓடிக் கொண்டிருந்தது. இருந்தும் பொறுமையுடன் இருந்தேன் . இறுதியாக அவரே வந்தார். மறுபடியும் அவரின் அறைக்குச் சென்றேன். “ சார்…சார்” என்று அழைத்தேன் . முதல் கேட்ட அதே குரல் , அதே தொனி, வார்த்தையும் அதேதான் “ உள்ளே வாங்க” என்று அழைத்தார். அறைக்கு செல்ல வேண்டும், கோப்பை கொடுத்துவிட்டு சென்று உணவு உண்ண வேண்டும் என்ற மனக் கோட்டையே சிறிது நேரத்திலேயே கட்டிவிட்டேன். ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேற ஒன்று . கதவை திறந்தேன் . யாரிடவோ பேசிக் கொண்டிருந்தார்.மறுபடியும் காத்திருப்பு. சலிப்பு வர ஆரம்பித்து விட்டது. பசியில் கை நடுக்கம். அவர் ஒரு கையில் காத்திருங்கள் என குறியீடு கொடுத்தார். என் மனநிலையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தொடர்பை துண்டித்தார். அவர் முன் நின்று “ சார், நீங்கள் சொன்ன மாதிரி செய்து விட்டேன் சார்”.. என்று கூறினேன். அவரோ என்னை ஒரு பார்வை பார்த்தார். அதிலுள்ள அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஆனால், அவருக்கு என்மேல் குறி வைத்திருக்கிறார் என நான் அப்பொழுதுதான் புரிந்துக் கொண்டேன். அவர் மறுபடியும் அந்த கோப்பினை என்னிடமே நீட்டினார். மறுபடியும் திட்டு. இம்முறை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பசி, கால் வலி,வீட்டு பிரச்சனை அனைத்தும் அவர் பேச பேச என் மூளையில் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தது. கோபம் வந்தது. என் முன் ஒரு பேனா இருந்தது. அதை வேகமாக எடுத்து அப்படியே அவரின் கையில் குத்தி விட்டேன். இது அனைத்தும் ஒரு இமை நொடியில் நடந்தது. முதலாளி கதறி அழுதார். கையிலிருந்து இரத்தம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் எனக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. அப்படியே பேனாவை கீழே போட்டுவிட்டு ஓடினேன். வேலையாட்காள் வருமுன் வேகமாக வாகனத்தில் அமர்ந்தேன். என்ன நடந்தது என்றே புரியவில்லை. கண்ணை சற்று இலேசாக மூடினேன். திடிரென்று பீப்…பீப் என்ற சத்தம் வந்தது. கண்ணை வேகமாக திறந்து பார்த்தேன். என் முன் வாகன நெரிசல். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். திடீரென ஒரு அழைப்பு குமாரிடம். ஏன் மனதில் பதற்றம். எடுக்கவில்லை. மறுபடியும் அழைப்பு. அழைப்பை எடுத்தேன். “ டேய் ,எங்கடா இருக்க “ என்று கேட்டான். அவன் தொனியில் ஒரு பதற்றம் தெரிந்தது. உடனே நான் “டே குமரா இன்னைக்கு …” என்று நடந்த அனைத்தையும் கூறி அழுதேன். “டேய், நீ இன்னுமாட தெளியில?” எனக்கு அது கேட்டவுடன் ஒரே அதிர்ச்சி . “என்னடா சொல்ற!” , ஆமா டா, இன்னைக்கு நீ அவரோட கையில அந்த ஏன் முனையில் குத்தல.உன் காலில் குத்திக்கிட்ட. அந்த இரத்தம் உன் காலில் வந்தது. அத பார்த்துதா முதலாளி கத்துனாரு” என்று கூறி முடித்தான். நான் மெதுவாக என் காலைப் பார்த்தேன் . இரத்தம் வந்து காய்ந்து போன தடம் இருந்தது. அப்படியே உலகம் இருண்டது.



