
பள்ளி வளாகத்தின் ஓரத்தில் வளர்ந்திருந்த அந்தப் பழமையான ஆலமரம், பல தசாப்தங்களாகக் காதல் மற்றும் நட்பின் ரகசியங்களுக்கு ஊமையாகச் சாட்சி சொல்லி வந்திருக்கிறது. அதன் அகன்ற விழுதுகளில் ஊஞ்சலாடிய கதிரின் குறும்புக்கும், நிலாவின் அமைதியான பார்வையுக்கும் அந்த மரம் மெளனச் சாட்சியாக இருந்தது. கதிர், எப்போதுமே கலகலப்பானவன்; அவனது பேச்சில் எப்போதும் கவித்துவமான வேகம் இருக்கும். அவனது ஒவ்வொரு சொல்லும் கவிதை வரிகளாகவே வெளிப்படும். அதற்கு நேர்மாறாக நிலா, கடலில் எழும் அலையை வேடிக்கை பார்க்கும் கரை போல நிதானமானவள். கதிரின் கவிதை வரிகள் நிலாவின் விழிகளில் அர்த்தம் கண்டன. அவர்களின் நட்பு, ஒரு மெல்லிய தென்றல் போலத் தொடங்கி, காலம் செல்லச் செல்ல காதலாக மௌனமாக மலர்ந்திருந்தது.”நிலா, இந்தக் கவிதை உனக்காக,” என்று ஒரு காகிதத்தை நீட்டிய கதிரின் கைகள் லேசாக நடுங்கின. அதில் அவன் எழுதியிருந்தது, ‘காலம் நம்மைப் பிரிக்கலாம், ஆனால் உன் நினைவுகளின் நிழல் என் ஆன்மாவில் எக்காலமும் வசிக்கும்’ என்பதுதான். அதை வாங்கிக்கொண்ட நிலாவின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை தவழ்ந்தது. அந்தப் பள்ளிச் சுவர்களுக்குள் அவர்கள் கண்ட கனவுகள் தனித்துவமானவை. தேர்வுக் காலங்களில் ஒன்றாகப் படித்தது, மதிய உணவை மாறிப் பகிர்ந்துகொண்டது, வகுப்பறை சன்னலில் அமர்ந்து எதிர்காலத்தைப் பற்றிப் பேசியது என அனைத்தையும் அவர்கள் மிக நெருக்கமாகப் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் உலகம் மிகச் சிறியது, ஆனால் அதில் ஆசைகள் பிரம்மாண்டமாக இருந்தன.ஆனால், வாழ்க்கை எப்போதும் நாம் திட்டமிட்ட பாதையில் பயணிப்பதில்லை. கல்லூரிப் பருவம் அவர்களை வெவ்வேறு திசைகளுக்கு இழுத்துச் சென்றது. பொறியியல் கல்லூரிக்குச் சென்ற கதிர், புதிய சூழலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். நிலா மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்தாள். தொலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் ஒரு கட்டத்தில் வெறும் சடங்குகளாக மாறின. கதிரின் மென்பொருள் துறை வேலை அவனது நேரத்தை விழுங்கியது; நிலாவின் ஆசிரியர் பட்டப்படிப்பு அவளைச் சோர்வடையச் செய்தது. எதிர்பாராத ஒரு சிறிய மனஸ்தாபம், நிலாவின் தன்முனைப்பு (Ego) மற்றும் கதிரின் பிடிவாதம் என அனைத்தும் சேர்ந்து அவர்களுக்கு இடையே பெரும் சுவரை எழுப்பியது.”நட்பு என்ற பெயரில் பழகியிருக்கலாம், காதலித்து பிரிந்ததுதான் மிச்சம்! இனி நமக்குள்ளே எந்தத் தொடர்பும் வேண்டாம்,” என்று நிலா அனல் கக்கும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டுச் சென்றபோது, கதிர் நிமிர்ந்து பார்க்கக் கூடத் திராணியின்றி நின்றான். அந்தப் பிரிவின் வலி அவனைப் பல காலம் வாட்டியது. ஒருநாள் தொலைபேசியில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் பெரும் புயலாக வெடித்தது.”உனக்கு வேலைதான் முக்கியம் கதிர்!” என்று கத்தினாள் நிலா. “நம்ம எதிர்காலத்துக்காகத்தான் நான் உழைக்கிறேன், நிலா. இதைப் புரிஞ்சுக்க ஏன் மறுக்கிற?” என்று கதிர் கெஞ்சினான். “அந்த எதிர்காலத்துல நான் இருக்கேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? உனக்குத் தேவை சக்சஸ், எனக்குத் தேவை நீ. இதுதான் நமக்கும் அவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.” “இப்படி பேசாத நிலா.” , என்று கதறினான் கதிர் . “நான் எப்படி பேசணும்? நீ என்னைப் புரிஞ்சுக்கணும்னுதானே கேக்குறேன்?”, என்று கண்களில் கண்ணீர் தழும்ப தழும்ப அவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.”நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன், ஆனா இந்த வேலைப்பளு என்னை கொன்னுட்டு இருக்கு.கதிர் அமைதியானான். அந்த அமைதிதான் நிலாவை இன்னும் காயப்படுத்தியது. “நான் உன்னை மிஸ் பண்ணுறேன் கதிர்.” அந்த வார்த்தையை அவள் கண்ணீரோடு சொன்னாள். “ஒவ்வொரு நாளும் மிஸ் பண்ணுறேன். ஆனா நீயே இல்லாதபோது என் காதலுக்கு என்ன அர்த்தம்?” என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள். அந்தத் துடிப்பான கவிஞன், இப்போது வெறும் குறியீடுகளுக்கு நடுவே வாழ்பவனாகச் சுருங்கிப் போனான். நிலா, ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையாக, குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பில் இருந்தாள். அவளது உலகம் இப்போது மாணவர்களையும், அவளது தனிமையையும் மட்டுமே கொண்டிருந்தது. அவர்கள் பிரிந்த சில நாட்களில், நிலா தனது உடல் மாற்றங்களை உணர்ந்தாள். மருத்துவப் பரிசோதனையில் தான் கதிரின் குழந்தையைச் சுமக்கிறேன் என்பது அவளுக்கு உறுதியானது. கருவில் வளரும் உயிர் அவளுக்குச் சுமையாகத் தெரிந்தது. கதிர் இல்லாத உலகில், அந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம் என்ற பயம் அவளை ஆட்கொண்டது. அந்தத் தவிப்பின் உச்சத்தில், கதிர் பிரிவதற்கு முன்பு பரிசாகக் கொடுத்துச் சென்ற அந்த டைரியைத் திறந்தாள். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் கதிரின் வாசனை இருந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் கதிர் எழுதியிருந்தது: “ஒருவனுடைய அன்பு, அவனுக்குப் பின்னும் ஒரு சுடராக அவனுடைய சந்ததியிடம் வாழும். நீ எப்போது இதைப் படிக்கிறாயோ, அப்போது நான் உன்னோடு இருக்கிறேன் என்று அர்த்தம்.” அந்த வரி நிலாவின் கண்ணீரைத் துடைத்தது. தன் காதலின் அடையாளம் இந்த மழலை என்று உணர்ந்து, அந்த உயிரைச் சுமந்து வளர்க்க முடிவெடுத்தாள். அந்த டைரிதான் அவளுக்குப் பலம் கொடுத்தது. கதிரின் நினைவுகளுடன் அவள் தன் வாழ்க்கையைத் தொடங்கினாள். வருடங்கள் கரைந்தன. ஆதிரா, கதிரின் சிறுவயது போலவே சுறுசுறுப்புடன் வளர்ந்தான். ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் கேட்க, “உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?” என்று கேட்டதற்கு ஆதிரா அமைதியாக நின்றான். மாலை வீட்டில் வந்து, “அம்மா… என் அப்பா யாரு?” என்று கேட்டபோது நிலாவின் இதயம் நொறுங்கியது. “அவர் எங்கே?” என்று கேட்டு, “அவர் என்னை பார்க்க வருவாரா?” என்று ஏங்கினான். நிலா கண்ணீரை மறைத்துக்கொண்டு, “ரொம்ப தூரம்” என்று மட்டும் கூறி மழுப்பினாள். “அவர் என்னை பார்க்க வருவாரா?” “நிச்சயமா வருவார்,” என்று நிலா தழுதழுத்தாள். கதிர் தனது அலுவலக வேலையை முடித்துவிட்டு, ஒரு மழைக்கால மாலை நேரத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். வானம் கருமேகங்களால் மூடப்பட்டு, பேய் மழை கொட்டிக்கொண்டிருந்தது. சாலைகள் வெறிச்சோடி இருந்தன. கதிர் தன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிலாவின் ஞாபகங்கள் எப்போதும் ஒரு மெல்லிய இழையாக அவனது மனதின் ஓரத்தில்தான் இருந்தன. ரேடியோவில் பழைய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தனக்குத்தானே பேசினான். “நிலா… நீ சந்தோஷமா இருக்கியா?” சிவப்பு சிக்னலில் நின்றபோது அவன் பணப்பையைத் திறந்தான். அதற்குள் இன்னும் நிலாவின் பழைய புகைப்படம் இருந்தது. “மறக்க முடியல…” என்று முணுமுணுத்தான். அந்த நொடியில், எதார்த்தமாக சாலையைக் கடக்க முயன்ற சிறுவனைப் பார்த்துப் பதறி பிரேக் போட்டான். கார் வழுக்கிச் சென்றது… பயங்கர சத்தம்! அவசரமாக பிரேக் போட்டான். கார் வழுக்கிச் சென்று மோதுவதற்கு முன்பாகவே அவனது உலகம் இருண்டது. பயங்கர சத்தம். பிறகு… எல்லாம் அமைதியானது. அடுத்த கணம், கதிர் ஒரு மாய உலகில் மிதப்பது போல உணர்ந்தான். சுற்றிலும் மருத்துவமனையின் அவசர வார்டு. முதலில் ” ஐயோ என்னால் பார்க்க இயலவில்லை” , என்று பதறினான், அதற்கு பின் அவன் மயக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்தான். மறுபுறமோ, “நர்ஸ் சீக்கிரம் ஆபிரேஷனுக்கு ரெடி பண்ணுங்க பையன் கிரிட்டிகள் ஸ்டேஜ் இருக்கான்”, என்று அவசரம் அவசரமாக பையனைக் காப்பாற்றப் போராடும் மருத்துவர்களின் சத்தம் கதிரின் காதுகளில் ஒலித்தது. “டாக்டர்! என் பையனை காப்பாத்துங்க!” என்று ஒரு பெண் குரல் கதறியது. அது நிலா! ” ஐயா ஆதிரன் அம்மாவே விட்டுட்டு போயிராதே ஐயா.. அம்மாக்கு உன்னை விட்ட வேறு உறவு இல்லை ஐயா” என்று நிலா ஆதிரன் பக்கத்தில் அழுதுக் கொண்டிருந்தாள் . ” உன் அப்பா வேறு யாரும் இல்லை என்னை காத்திலத்தவனே” என்று அவள் தொடரும்பொழுது, கதிரின் காதில் எட்டியதும் மனதில் இடி இடித்தது. தான் வாழ்க்கை சீரழிந்தாலும் பராவாயில்லை என்று தன் வாழ்க்கையை அற்பணித்து ஆரியனைப் பெற்றெடுத்துருக்காளா ?”, என்று தெரிந்ததும் கதிர் தன் மகனைப் பார்க்கவே கட்டிலில் இருந்து மெதுவாக எழுந்து ஆதிரனின் அறைக்குச் சென்றான். “நிலா, நான் இங்க தான் இருக்கேன்! என் மகனுக்கு என்னோட இரத்தத்தை எடுத்துக்கோங்க!” என்று கத்தினான். மருத்துவர்கள் ஓடிக்கொண்டிருந்தனர். யாரும் அவனைக் கவனிக்கவில்லை. சிகிச்சை தீவிரமாக நடந்தது. நிலா கடவுளிடம் வேண்டாத தெய்வமில்லை. சிகிச்சை பெற்று கொண்டிருந்த சிறுவனைப் பார்த்த நொடியே அவன் மூச்சு நின்றது. அந்த கண்கள், அந்த நெற்றி, அந்தச் சிரிப்பு அவனைப் போலவே உரித்து வைத்திருந்தான் ஆதிரன். அவனது கால்கள் பலவீனமானது. கண்ணீர் வழிந்தது. “நமக்குக் குழந்தை இருக்கான்னு கூட தெரியாம வாழ்ந்துட்டேனா? நான் எவ்வளவு பெரிய முட்டாள்…” எனத் துடித்தான். “என் கிட்டே சொல்லிருக்கலாம்லே நிலா …ஏன் மறைச்சே ?”, என்று அவள் அருகில் சென்று அவளது தோளைத் தொட்டான். அவனது கைகள் அவள் தோலை ஊடுருவி மறுபுறம் சென்றன. காற்று ஊடுருவுவது போல உணர்ந்த நிலா, சட்டென ஒருமுறை உடல் சிலிர்த்துக் கொண்டாள். கதிர் அதிர்ந்து போனான். தன் உடலைப் பார்த்தான்; அது ஏதோ ஒரு மெல்லிய புகை மூட்டம் போல மங்கலாகத் தெரிந்தது. சுவரில் இருந்த கண்ணாடியில் அவன் தன் உருவத்தைத் தேடினான். அங்கே வெறும் சுவரைத் தவிர வேறொன்றுமில்லை. மணி பன்னிரண்டு. ஆதிரா மெல்லக் கண்களைத் திறந்தான். நிலா ஆனந்தக் கண்ணீருடன் அவனைக் கட்டிக்கொண்டாள். “ஆதிரா, கண்ணா… அம்மா வந்துட்டேன்,” என்று நிலா கதறினாள். ஆனால், ஆதிரா நிலாவைப் பார்க்கவில்லை. அவன் கண்கள் நேராகக் கதிர் நின்றிருந்த இடத்தைப் பார்த்து நிலைத்தன. அவனது உதடுகள் லேசாக விரிந்தன. ஒரு மெல்லிய புன்னகை. நிலா குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். “ஆதிரா, அங்கே என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டாள். அங்கே யாரும் இல்லை. வெறும் வெற்றிடம் மட்டுமே. நிலா தன் மகனை அணைத்துக் கொண்டு, “அப்பா எங்கே இருக்காருன்னு தெரியல, ஆனா அவர் பாத்துக்கறாருன்னு என் மனசு சொல்லுது,” என்று தன் மகனிடம் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், ஆதிரா மெதுவாக, நிலாவுக்குக் கேட்காத அந்த மெல்லிய குரலில், “தேங்க் யூ டாடி…” என்று உச்சரித்தான். ஆதிரா தனது சிறிய கையை நீட்டினான். கதிரும் கை நீட்டினான். தொட முடியவில்லை. ஆனால், அந்தக் கணத்தில் தந்தையும் மகனும் இணைந்திருந்தார்கள். மேசையின் மீது இருந்த கதிரின் டைரி தானாகவே திறந்தது. அதில் புதிதாக எழுத்துக்கள் தோன்றியிருந்தன: “மரணத்திற்குப் பின்னும் அன்பு உயிர்த்திருக்கும். நான் உங்களை கவனித்துக்கொண்டு, இந்தக் காற்றுடன் கலந்திருக்கிறேன்.” ஜன்னல் வழியாக வந்த தென்றல் நிலாவின் கன்னத்தை வருடியது. அந்தத் தென்றலில் கதிரின் வாசனை இருந்தது. அது கதிரின் கடைசி விடைபெறலாக இருந்தது. காதல் மரணத்தை வென்று, அந்தத் தென்றலில் கலந்திருந்தது.



