Malaysiaசிறுகதை

நினைவலைகளின் நிழல்

ஹர்ஷினியின் சிறுகதைப் படைப்பு ,UPLOADED BY: KRISHAN THIVAGARAN

“ டேய் நில்லு டா நா வரெ “ என்று அன்பழகி வேகமாக கத்தினாள், வகுப்பரையை நேக்கி ஓடி கொண்டிருந்த அந்த கால்கள் அங்கேயே நிற்க செய்தது. அப்போது அவர்களுக்கு ஏழு வயது. அன்பழகி அமுதன் இடையில் நல்ல அழகான நட்பு மலர்ந்த தருனம். அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் ஒன்றாகவே வளர்ந்தார்கள். வயது ஏழு முதல் பதினேழு வரை, அவர்களின் பள்ளிப் பருவம் முழுவதும் ஒரு கூட்டுப் பறவைகளைப் போலத்தான் கழிந்தது. அமுதனும் அன்பழகியும் பல பள்ளி வளாகங்களில் மற்ற நெருங்கிய நண்பர்களோடு இல்லாத இடங்களே இல்லை. மதிய உணவு நேரத்தில் உணவை பகிர்ந்து கொள்வது, காற்பந்து ஒன்றாக விளையாடுவது, பல பள்ளி வேலைகளை ஒன்றாக செய்வது போன்ற எல்லாவற்றிலும் அவர்கள் ஒன்றாகதன் இருந்தனர். அன்பழகிக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அவர்களுடைய சுட்டித்தனமும், எதற்கும் அஞ்சாத தைரியமும், எல்லாவற்றையும் பாகுபாடின்றி கற்றுக் கொள்ளும் மனப்பான்மையும், சுத்தமான தோழமையுடன் பழகும் குணமும் அவளை மற்ற சிறுவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டவில்லை. அவளுடைய ஆண் நண்பர்கள் அனைவரும் அவளை ஒரு பெண்ணாகப் பார்க்காமல், தங்களில் ஒருவனாக, அதாவது ஒரு பையனைப் போலவே நடத்தினார்கள். ஆனால், அமுதனின் பார்வை மட்டும் ஆரம்பத்திலிருந்தே அவளிடம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவர்களின் பள்ளிப் பயணத்தின் நடுப்பகுதியில், சரியாகப் படிவம் 3 படிக்கும் காலத்தில், அமுதனின் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதுவரை நட்பாக இருந்த அவனது உணர்வு, மெல்ல மெல்ல ஒருதலைக் காதலாக உருவெடுக்கத் தொடங்கியது. அன்பழகியின் சிரிப்பு, கோபம், துணிச்சல், சிடு சிடு என்று இருக்கும் முகம் அனைத்து அமுதனின் இதயத்தை அவனையறியாமல் துடிக்கச் செய்தது. அதிலிருந்து, அவளுக்கே தெரியாமல் அவன் அவளை உற்று நோக்குவது, அவளின் சின்ன சின்ன தேவைகளை கவனிப்பது அவனது வழக்கமாக மாறியது.  இருப்பினும், அன்பழகிக்கு இதில் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவள் அமுதனை எப்பொதும் போல் ஒரு நல்ல நண்பனாக மட்டுமே பார்த்தால். அந்த இடைநிலை காலக்கட்டத்தில் சில பசங்க அன்பழகியின் கவனத்தை ஈர்க்கப் பல முயற்சிகளை மேற்க்கொண்டாலும், அதர்க்கு பயனலிக்காதமாரு அவவளின் செயல் இருந்தது. அன்பழகி அந்த காதல் வலையில் சிக்கிக் கொள்ளவில்லை. அவளுக்கு நட்பு மட்டுமே தெரிந்த்தது தவிர காதல் எட்டாத தூரத்தில்தான் இருந்தது. அமுதன் பல நேரங்களின் தன் காதலை வெளிபடுத்திவிடலாம் என்று என்னிய போது அதனை சொல்ல அவனுக்கு துணிச்சல் இல்லை. அதனால் நட்பை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் தன் உணர்வுகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தான். பள்ளிப் படிப்பு முடிந்து அன்பழகி தன் கணக்கியல் துறையில் பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, அடுத்துத் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் தொடரத் தொடங்கினாள். இந்த கல்லூரிப் பருவம்தான் அவளுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை ஆண்களை வெறும் நண்பர்களாக மட்டுமே பார்த்துப் பழகிய அன்பழகி கண்களுக்கு, முதன்முறையாக ஒருவன் அவழுடைய முழு கவனத்தை ஈர்த்தான் சித்தார்த். சித்தார்த் ஏற்கனவே தன் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனத்தில் கார் நிபுணராக வேலை புரிகிறான். அவன் கலகலப்பானவன், ஆழமான அறிவைக் கொண்டவன், மற்றவர்களுக்கு ஊன்றுக்கோளாக திகழ்பவன் மற்றும் பல இடங்களிலும் வேளைகளிலும் தனித்து சிறந்தவனாக திகழ வேண்டும் என்று எண்ணுபவன். ஒரு நாள் அன்பழகி தன் நண்பர்களோடு வெளியே சென்றிருந்த போது தான் இவர்களுக்கு அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் சாதாரணமாக நகைசுவையோடு பேசி கொண்டிருந்த இவர்களுக்கிடையே ஆழமான உரையாடல் தொடர தொடங்கியது. இந்த ஆழமான உரையாடல் ஆழமான புரிதலை ஏற்படுத்தி பின்னர் இவர்களுகிடையே மெல்ல மெல்ல காதலாக மாறியது. தொடகத்தில் இதைப் பற்றி அன்பழகி அமுதனிடமும் மற்ற நண்பர்களிடம் கூரும் போது அமுதன் முகம் காட்டவும், எறிச்சலோடு பேசவும் இது நீண்ட நாள் தொடராது என்று எதிர்மறை உணர்வோடு பேசி கொண்டிருந்தான். ஒருநாள், அன்பழகி அமுதன் மற்றும் மற்ற இரண்டு நண்பர்கள் சேர்ந்து கோலம்பூருக்கு ஒரு மூன்று நாள் சிறிய கால விடுமுறைக்கு சென்று வரலாம் என்று புறப்பட்டனர். அந்த பயனத்தின் முதல் நாள், அன்பழகியும் நண்பர்களும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று அன்றைய நாளை சிறப்பாக கழித்தனர். பின்னர், இரண்டாம் நாள் அன்று, அவர்கள் பத்து கேவ் சென்று முருகனிடம் இருந்து தரிசனம் பெற்ற பிறகு கீழே இறங்குவதர்க்கு முன்பு அன்பழகி தன் நண்பர்களிடம் அவளின் காதலனான சித்தார் வந்து அன்று அவர்களுடன் முழுவது இருக்க போவதாக கூறுகிறால். இதற்க்கு அமுதன் “ ஏ எதற்கு நம்ப மட்டும் தான தய்ம் ஸ்பென் பன்னலானு வந்துருக்கோம்” என்று கூறினான். பின்னர் அன்பழகி “அவர் என்னை பார்க்க மட்டும் வரல உங்க எல்லாறையும்தான் பார்க்க வராரு” என்றால். இந்த பேச்சு வார்த்தை முடிந்த பிறகு கிழே இறங்க முடிவெடுத்து அனைவரும் படியில் தங்களின் கால்களை எடுத்து வைத்தனர். பாதி படிகளை கடந்த சிறு நொடியிலே, அன்பழகிக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. அவள் உடனே பக்கத்தில் இருந்த்த அமுதனின் கைகளை பிடித்துக் கொண்டு இறங்க தொடங்கி, கீழே பார்த்து ஒரு கடையில் அமர்ந்தால். பின்னர், கொஞ்சம் நிதானம் அடைந்த பிறகு, அவர்களின் காலையுணவை உண்டனர். பின்னர், அன்பழகியின் காதலனான சித்தார் வந்த பிறகு தங்களின் பயனத்தை தொடரும் வகையில் கேமரன் ஹைலனுக்கு இரண்டு வாகனத்தில் சென்றனர். அந்த நாள் அமுதனின் முகம் டல்லாகவும், வாடியும் காணப்பட்டது. அவன் யாரிடமும் சரியாக பேசவே இல்லை; பல இடங்களுக்கு தனியாக செல்வது, ஒரு மூலையில் அமைதியாகவே அமர்ந்திருந்தது போன்றவற்றில் தான் காணப்பட்டான். தன் கண் முன்னால் தன் ஒருதலையாக கதலித்த தோழி வேறொருவனை எப்படிக் காதலிக்கிறாள் என்று பார்க்கும் வலி அவனை குதறியது. அன்பழகி அவனிடைம் வந்து, “என்னடைா அமுதா, ஒரு மாதிரி இருக்க? உடைம்புக்கு முடிய லயா?” என்று கேட்டதற்கு, அவன் போலிப்புன்னகயுடைன், “ஒன்னுமில்ல டி, கொஞ்சம் தலவலி அவலோத” என்று கூறித் தவிர்த்தான். அந்தப் பயணத்தின் முடிவில் சித்தார்த் அன்பழகியின் காதல் உச்சத்தையடைந்தது, ஆனால் அமுதனின் இதயம் சுக்குநூறாக உடைந்து போனது. அமுதனின் மனதுக்குள், “காலையில் என்னை பிடித்த அந்த கைகள் எப்படி இன்னூருவனை காதல் என்று பிடித்தது, அப்படி என்றால் என் காதல்?” என்ற கேள்வி ஓடிக் கொண்டேதான் இருந்தது. அந்த இரண்டாம் நாள் அன்பழகிக்கும் சித்தாருக்கும் சிறந்த பல புதிய அழகான நினைவாக ஆனது. ஆனால், அமுதனுக்கோ அது பல கேள்விகள் நிறைந்த நாளகவும் தன்னை தானே வெருக்கும் மறக்க முடியாத நாளாக மாறியது. அன்று நாள் முடிந்து, சித்தார் இரவு உணவிற்கு பிறகு விடைப்பெற்றான். மூன்றாம் நாள், அமுதனுக்கு இன்னும் நேற்று நடந்த நினைவுகளோடும் வழியோடு இருந்தது ஆனால் அவன் அதனை கட்டாமல் அன்றையா மூன்றாம் நாளையும் கழித்தனர். நாள்கள் உருண்டோடியது. எந்த ஒரு காதலாக இருந்தாலும் மோதல் இல்லாமல் இருக்காது. அது இயல்பானதல்லவா? அதேபோல, சித்தார்த்துக்கும் அன்பழகிக்கும் இடையே ஒரு சிறிய சண்டையாக இருந்தாலும் அது போர போக்கில் மிகப்பெரிய சண்டையாக வெடித்தது. அந்தச் சண்டையில் அவர்களின் ஈகோ சிறுத்தைபோல வேகமா வெளியேரியது. இதன் இறுதி பிரிவாக முற்றடைந்தது. அதுவரை தன் உலகமாக நினத்த சித்தார்த் தன்னை விட்டுப் பிரிந்ததை அன்பழகியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் அறயிலேயே முடங்கி, அழுதுகொண்டே இருந்தாள். இந்த பிரிவினாள் அவள் ஆலே வேருமாறியாக மாறினால். இந்த கஸ்ட்ட சூழ்நிலையில், அவளுக்கு ஆறுதலாக இருக்க அமுதன் ஓடிவந்தான். வேறு யாரையும் அவள் இடத்தில் வைத்து பார்க்க முடியாத அவன்; அவளையே உலகம் என்று நினைத்தான். அவளை இந்தத் துயரத்திலிருந்து மீட்டெடுக்க அரும்பாடுபட்டான். அன்பழகியின் மனதை மாற்ற அவள் விரும்பும் கோவிளுக்கு, பிடித்த இடங்களுக்கு, சாப்பிட செல்வதர்க்கு கூட்டிச் செல்வான். அந்த நேரத்தில் அவளை சிறு குழந்தையைப் போலப் பார்த்துக்கொண்டான். அந்தத் தருணத்தில்தான், அன்பழகிக்கு ஒரு பெரிய உண்மைப் புரியத் தொடங்கியது, அமுதன் தன் மீது சாதாரண நட்புக்கும் மேலான, ஆழமான தீவிரமான உணர்வை வைத்திருக்கிறான் என்பதை அவளுடைய உள்ளுணர்வு உணர்த்தியது. அமுதன் அவளை தன் காதலியாகப் பெறத் தொடர்ந்து முயற்சித்து வந்தான் என்று தெரியவந்தது. சந்தேகம் வலுக்கவே, அன்பழகி ஒருநாள் நேரடியாக அமுதனிடம் கேட்டு ஒரு ஆளமான உரையாடலை தொடர்ந்தால்; அப்போதுதான் அவளுக்கே தெரிய வந்தது அமுதன் தன்னை படிவம் மூன்றிலிருந்தே உருகி உருகிக் காதலித்துள்ளான் என்று. இதனை உருதிபடுத்திக்கொள்ள அவள் தனது மற்ற நெருங்கிய நண்பர்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டாள். இது அனைத்தும் அன்பழகிக்கு தெரிந்த பிறகு, அமுதன் தன் காதலை அவளிடம் முறைப்படி மும்மொழிந்தான். ஆனால் அன்பழகி அந்த கனமே, , “அமுதா நீ எனக்கு நல்ல பிரண்டு மட்டும்தான் நா உன்னைய அப்படிதா பார்த்துருக்கே; என் மனசுல சித்தார்த்தைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை. உன்ன என்னால அந்த இடத்துல வச்சுப் பார்க்க முடியாது”. என்று அவனது காதலைக் கறாராக நிராகரித்துவிட்டள். இந்த நிராகரிப்பு இன்னும் அமுதனை நிலைகுலையச் செய்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சில மாதங்களாக அமுதனை யாராலும்மே தொடர்புக் கொள்ள முடியவில்லை. அவன் முற்றிலும் காணாமல் போனான். அவனுடைய கைதொலொபேசி, குடும்பம், உறவுகள் மற்ற நண்பர்களுக்கும் அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் ஒரு இருள் சூழ்ந்திருந்தது. என்னவாகினும் அன்பழகியின் மீது தவறு இல்லாவிட்டாலும் அமுதனின் காணாமல் போன நாட்கள் அவளுக்கு ஒரு குற்ற உணர்வைத் தந்து கொண்டேதான் இருந்தது. திடீரென்று ஒருநாள், அன்பழகிக்கு இடி போன்ற செய்தி ஒன்று அவளின் காதுகளுக்கு எட்டியது, அதாவது அமுதனின் இறப்புச் செய்தி ஆனால் சடலம் கிடைக்கவில்லை. இந்த துயர செய்திய கேட்ட அன்பழகி நிலைகுலைந்து கதறி அழுதாள். தன் சிறுவயதிளிருந்து தன்னுடன் பயணித்து வந்த நண்பன் இப்பொது இல்லையே என்று அவளால் நம்ப முடியவில்லை.  அமுதனின் மறைவும் அதனால் ஏற்பட்ட சோகமான சூழ்னிலைக்கு பின்னால், பல மாதங்கள் கழித்து சித்தார்த் மீண்டும் அன்பழகியை தேடி வந்தான். அவளுடைய அழுகையைத் துடைத்து பின்னர், அன்று தான் அவளை விட்டு பிரிந்த காரணத்தையும் அதர்க்கு பின்னால் ஒளிதிருந்த உண்மையை வெளிப்படுத்தினான். சித்தார்த் சொன்ன அந்த உண்மை அன்பழகியின் இதயத்தை உலுக்கியது. அன்பழகிக்கும் சித்தார்த்துக்கும் சண்டை நடைப்பதற்கு இடைப்பட்ட காலத்தில், சித்தார்த்தும் அமுதனும் பதிமறைவாகச் சந்தித்திருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் அமுதன் தன் உடைம்பில் இருக்கும் ஒரு கொடிய நோய் அதாவது “Huntington’s disease” என்ற மூலை சார்ந்த நோயய் பற்றிச் சித்தார்த்திடைம் கூறியிருக்கிறான். தான் உயிர் வாழ்வதற்கான காலக் கெடு மிகவும் குறைவு என்றும், தனக்கு இன்னும் சில மாதங்கள் மட்டும ஆயுள் இருக்கிறது என்றும் அமுதன் கண்ணீருடைன் சொல்லியிருக்கிறான். அமுதன் சித்தார்த்திடைம் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட விஷயம் இதுதான்: “நான் சாகுறதுக்கு முன்னாடி, எனக்குப் பிடிச்ச அன்பழகிகூட கொஞ்சம் அதிகமான நேரத்தைச் சலவழிக்கணும்னு ஆசைப்படுறேன். நான் போனதுக்கு அப்புறம் அவள நல்லா நீத பாத்துகனும். பிளீஸ், எனக்காகக் கொஞ்சம் வழிவிடு.” அமுதனின் இந்த நிலமையைக் கண்டு உருகிய சித்தார்த், அவனது கடைசி ஆசையை நிறைவேற்றவும், அவனுக்கு அந்த நேரத்தை கொடுக்கவும் அன்பழகியுடைன் வேண்டுமெனறே சண்டை போட்டு, அவளை விட்டுப் பிரிந்திருக்கிறான். சில ஆண்டுகள் உருண்டோடியது. காலத்தினால் அவர்களின் காயங்கள் மெல்ல மெல்ல ஆறிய பிறகு சித்தார்த்தும் அன்பழகியும் மீண்டும் இணைந்து பெற்றோர்களின் ஆசீர்வாதத்தல் திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கின்றணர். இப்படி அழகாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் ஒரு நாள் மேகங்கள் கருப்பு நிரத்தை அள்ளி பூசிய இருந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி “திரிங் திரிங்” என்று ஒலித்தது. கதவை திறந்த அன்பழகி ஒரு நொடி சிதைந்து போய் நின்றால், எதிரில் பார்த்தால் அமுதன் மெலிந்த உடம்போடு, நிற்க கூட தெம்பில்லாமல் நின்றான். அவனை உள்ளே அழைத்து சித்தார்த்தும் அன்பழகியும் அதிர்ச்சியோடு பேச தொடங்கினர். “நீ இறந்துட்டேனு சொன்னங்க ஆன, நா உன்னதா பார்கரெனா என்னால நம்ப முடியல ஒரே குலப்பமா இருக்கு”. “ நா சகல. என்னோடெ ட்ரீட்மெண்ட்காக தூரமா போயிருந்த, எனக்கு யாரையும் பார்கவோ பேசவோ பிடிக்கலெ யாருக்கும் தெரியாம வாழ்ந்திருலானு நினைச்ச அதுனாலதா அப்படி ஒரு விசயத்த நானே பரப்பிவிட்டெ. என்ன எல்லாரும் செத்துட்டனுதா நம்பிகிட்டு இருபாங்க இன்னும் வரைக்கும்” என்றான் அமுதன். அதற்கு உடனே அன்பழகி “நீ யா இப்படி சொல்ற, இங்க பார் உனக்கு நாங்க இருக்கோம்” என்று சொன்ன சில வினாடிகளிலே அமுதன் மயங்கி சாய்ந்தான். அதை பார்த்து படபட்த்த சித்தார்த்தும் அன்பழகியும் ஆம்புலஸ்க்கு தொடர்புக் கொண்டு மருத்துவமணைக்கு விரைந்தனர். அமுதன் ஸ்தெரச்சரில் ஐ.சி.யு வாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டான்.  பல மணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர், எதுவும் கூறாமல் தரையை பார்த்த படியே நடந்து சென்றார். அந்த நொடியில் சில்லுனென்ற காற்று அவள் கண்களில் வழியும் கண்ணீரை தழுவியாது. இறுதி மூச்சிலும் அவனின் காதல் எதர்க்கும் சளித்தது அல்ல, அதே போல் அவழின் கண்ணத்தில் விழும் குளி அவனுக்கு முக்கியம் என்பதை அறிந்து அதை காண தன் இறுதி நொடியில் அவளை சென்று சரணடந்தான் அந்த புன்னகையுடனும் அவனின் இறுதி மூச்சுடனும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button