
மலேசியா-சீனா உடன்படிக்கைகளை உடனடியாக அமல்படுத்தும்படி பிரதமர் உத்தரவு! ஃபஹ்மி ஃபட்ஸில் தகவல்
கோலாலம்பூர்,ஏப்.23-
மலேசியா-சீனா இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை உடனடியாக அமல்படுத்தும்படி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்திருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.
கடந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின் பிங் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட போது மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பல புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்தாயின. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் அன்வார் பணித்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து முடிவு செய்யப்பட்ட நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அவ்வாறு பணித்திருப்பதாக டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் சொன்னார்.
கையொப்பமிடப்பட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் விரைவில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய இலக்கு என்று அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் குறிப்பிட்டுள்ளார்.



