
Malaysia
காணாமல் போன போலிஸ்காரர் உடல் மீட்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
பாசிர் சாலாக், டிச. 23-
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்போங் காஜா சங்காட் லாடா நீர்வரியில் குளித்து
கொண்டிருந்த போது காணாமல்
போனதாக புகார் செய்யப்பட்ட 39 வயது காப்ரல் போலிஸ் தவ்பிக் சாயூத்தி என்பவரின் உடல்
திங்கட் கிழமை அதிகாலை 4.55
மணியளவில் மீட்கப்பட்டது.
மலாக்கா தெங்கா மாவட்ட போலிஸ் தலைமையகம் சேர்ந்த இவர் சற்றும் எதிர்பாரா நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டதாக
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு உதவி இயக்குனர் ( செயல்ப்பாடு) சபரோட்சி நோட் அமாட் சொன்னார்



