
SME வங்கியின் 50 மில்லியன் புதிய நிதி திட்டம் டத்தோஸ்ரீ Ramanan Ramakrishnan பெரும் முயற்சியில் நடவடிக்கை
கோலாலம்பூர், மார்ச் 26-
Small Medium Enterprise Development Bank Malaysia (SME Bank) Vanigham Financing Scheme (VFS) என்ற புதிய RM50 மில்லியன் நிதி திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த திட்டம், சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் Dato’ Sri Ramanan Ramakrishnan கூறினார்.
இந்த நிதி திட்டத்தை அறிமுகப்படுத்திய டத்தோஸ்ரீ ரமணன் அவரது பணிகாலத்தில், MSMEs துறையை பலப்படுத்த RM250 மில்லியன் மதிப்பிலான பல்வேறு நிதி முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
MSMEs துறை மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2024-இன் நான்காம் காலாண்டில் 4.8% GDP வளர்ச்சி பதிவானது. SME Bank போன்ற நிறுவனங்கள் இத்தகைய நிதி திட்டங்கள் மூலம் தொழில்முனைவோருக்கு உதவி செய்கின்றன.”
VFS திட்டம் மூலம், தொழில்முனைவோருக்கு இயந்திரங்கள், வணிக வாகனங்கள் மற்றும் பணி மூலதனத்திற்கான நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் வணிகங்களின் வளர்ச்சி மற்றும் போட்டித்திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 31 டிசம்பர் 2027 வரை விண்ணப்பிக்கலாம். SME Bank இன் இந்த முயற்சி, MSMEs துறையின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார்.



