
Malaysia
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்துமலைக்கு வருகை
கோலாலம்பூர்,பிப் 6-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்துமலை திருத்தலத்திற்கு வருவாரா எனும் கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் பக்தர்களின் எதிர்பார்ப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பூர்த்தி செய்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பத்துமலை திருத்தலத்திற்கு வருகை மேற்கொள்ளவிருப்பதாக தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா தேசம் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
பிரதமர் அன்வார் பிற்பகல் 3 மணிக்கு பத்துமலை திருத்தலம் வருகை மேற்கொள்வார். பிரதமருக்கு பிரதான நுழைவாயிலில் மாலை அணிவித்து வரவேற்பு நல்கப்படும் என்று தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.



