Malaysia

சுங்கைச் சிப்புட் மஇகா தொகுதியின் ஏற்பாட்டில் வெற்றி வேல் தாமோ தரம் சுழற்கிண்ண மும்முணை காற்பந்துப் போட்டி தான் ஸ்ரீ எம்.இராமசாமி தொடக்கி வைத்தார்.

ஈப்போ,மார்ச் 22-
சுங்கைச் சிப்புட் மஇகா தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெறும் வெற்றி வேல் தாமோ தரம் சுழற்கிண்ண மும்முணைக் காற்பந்துப் போட்டியினை தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவருமான தான் ஸ்ரீ எம் இராமசாமி, அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

இப்போட்டி சுங்கைப் பூலோ திடலில் விருவிருப்பாக நடைப்பெற்றது.
இப்போட்டியானது சுங்கைச் சிப்புட் வட்டாரத்திலிருந்து மூன்று குழுக்களை உட்படுத்தியது.

இவ்வட்டார மக்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் மேலோங்கவும் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் தூண்டுகோளாக அமையும் வண்ணமாக இப்போட்டி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button