Malaysia

ஜம்ரி வினோத் விவகாரத்தில் பிரதமர் அன்வார் மௌனம் சாதிப்பது ஏன்? மலேசிய இந்து சங்கம் கேள்வி

புத்ராஜெயா, ஏப்.4
ஸம்ரி வினோத் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேள்வி எழுப்பினார்.

ஸம்ரி வினோத் இந்து சமயத்தை பலமுறை அவமதித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மீது ஆயிரக்கணக்கான போலீஸ் புகார் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்ட நிலையில்
ஸம்ரி வினோத் மீது இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று தங்ககணேசன் கேள்வி கேட்டார்.

இந்துக்கள் சிவராத்திரி பண்டிகையை கொண்டாடி முடிந்த நிலையில் ஜம்ரி வினோத் இந்து சமய மக்ககளையும் சிவலிங்கத்தையும் சிறுமைப்படுத்தி காணொளி மூலம் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஸம்ரி வினோத் வெளியிட்ட கருத்து நாடு முழுவதும் உள்ள இந்து சமயத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக தங்க்கணேசன் தெரிவித்தார்.

ஜம்ரி வினோத் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்ததால் ஒருங்கிணைப்பாளர் சசி முயற்சியில் புத்ராஜெயாவில் உள்ள தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் மகஜர் ஒன்று வழங்கப்பட்டது.
ஸம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கமாகும் என்று தங்க்கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்ரி வினோத் மீதான இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட வேண்டும். ஜம்ரி வினோத் உட்பட இந்து சமய விவாகரங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏன் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் என்பது புரியவில்லை.
ஒரு காலகட்டத்தில் எல்லா பிள்ளைகளும் எனக்கு அனாக் சாயா என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்று நமக்கு காயாதான் கிடைத்துள்ளது என்று தங்க கணேசன் சொன்னார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் அன்வார் மௌனம் களைய வேண்டும் என ஒட்டுமொத்த இந்துக்களும் எதிர்பார்க்கின்றனர். ஆகையால் பிரதமர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க கணேசன் கேட்டுக் கொண்டார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button