Malaysia

இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் காக்கும் சுயமரியாதை கொண்ட கட்சி ம.இ.கா இதனை காக்க தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள் மக்கோத்தா இந்தியர்களிடம் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வேண்டுகோள்

குளுவாங், செப்.23-
சுய மரியாதை இல்லாமல் வாழ முடியாது என்பது மஇகாவின் கொள்கையாகும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

பதவியும் பட்டமும் இல்லாமல் நாம் வாழ்ந்து விடலாம். ஆனால், சுய மரியாதை இல்லாமல் இருக்க முடியுமா என்று மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இந்திய மக்களுடனான மாபெரும் ஒற்றுமை விழாவில் பேசிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

மஇகா சொந்த காலில் நிற்பதற்கான முயற்சிகளை் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நாட்டில் இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் தேசிய முன்னணியால் மட்டுமே காக்க முடியும் என்றும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சொன்னார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில்
இத்தொகுதியில் இருக்கும் 5,000த்திற்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்த நாட்டில் இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் தேசிய முன்னணியால் மட்டுமே காக்க முடியும்.
இதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய முன்னணி ஆட்சியில் இருக்க வேண்டும்.
உங்களின் வாக்குகள் ஜொகூரில் மட்டுமல்லாமல் மத்தியிலும் எதிரொலிக்கும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

இந்திய சமுதாயத்திற்கு நிதி கிடைக்கிறது. ஆலயத்திற்கு நிலம் கிடைக்கிறது. தமிழ்ப்பள்ளி இடம் மாற்றப்படுகிறது என்பதற்காக நான் இதை கூறவில்லை. இதுதான் உண்மை நிலவரம் ய. ஆகையால் இதை புரிந்து கொண்டு வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசைனுக்கு இங்குள்ள மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button