Malaysia

ஆக்ககரமான செயல்பாட்டிற்கு ஆரோக்கியமான உடல் நலமே பிரதானம் . கோத்தா ராஜா ம இ காவின் போலிங் போட்டியில் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் வலியுறுத்து.

ஷா ஆலம்,செப்.23-
ஆரோக்கியமான வாழ்க்கையே ஆக்ககரமான செயல்பாட்டிற்கு மூல காரணம் என சிலாங்கூர் மாநில ம.இ.கா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ சங்கர்ராஜ் ஐயங்கர் கூறினார்.

கோத்தா ராஜா தொகுதித் தலைவருமான டத்தோ சங்கர் , தொகுதியின் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் ஜெகன் ஏற்பாடு செய்திருந்த போலிங் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய பொழுது அவ்வாறு தெரிவித்தார்.

 

இத்தகைய நடவடிக்கைகள் அதிக அளவில் நடைபெற வேண்டுமாய் டத்தோ சங்கர் கேட்டுக் கொண்டார்.

தொகுதியின் கிளைத் தலைவர்கள் , இளைஞர் , மகளிர், புத்ரா & புத்ரி பிரிவுகளோடு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்ட இப்போட்டியில், தொகுதியின் இளைஞர் பிரிவு வெற்றியாளராக வாகை சூடினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button