
இந்தியர்கள் விசுவாசமானவர்கள் அவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி வலியுறுத்து
குளுவாங், செப்.23-
இந்த நாட்டில் வாழும் இந்திய மக்கள் மிகவும் விசுவாசமானவர்கள் என்றும் இதை பல இடங்களில் தாம் உணர்ந்துள்ளதாகவும்
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
பாகான் டத்தோ எனது தொகுதியாகும். அதனை அந்த மக்களிடம் உணர்ந்திருக்கிறேன்.
இங்குள்ள மக்களுக்கு நான் உண்மையாக இருக்கிறேன். எனக்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்று டத்தோஸ்ரீ ஜாஹிட் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைக்க வேண்டாம். அவர்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். இதைத்தான் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசைனுக்கு நினைவுறுத்துகிறேன் என்று ஜாஹிட் சொன்னார்.
மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இந்திய மக்களுடனான மாபெரும் ஒற்றுமை விழாவில் அதிகமாக மக்கள் திரண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதால்
எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது என்று தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.



