
தைப்பிங் நகராண்மைக்கழக உறுப்பினராக வீரன் முணியாண்டி மீண்டும் நியமனம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு நன்றி
பேராக், ஏப்.4-
தைப்பிங் நகராண்மைக்கழக உறுப்பினராக வீரன்
முனியாண்டி மீண்டும் நியபனம் செய்யப்பட்டுள்ளார்.

ம.இ.கா தைப்பிங் தொகுதி தலைவரான வீரன் கடந்த 2022இல் முந்தைய ஆட்சி காலத்தின் போதே தைப்பிங் நகராண்மைக்கழக உறுப்பினராக சேவையாற்றி வந்துள்ளார்.
கடந்த 16/2/2023இல் ஓராண்டு காலத்திற்கு நகராண்மைக்கழக உறுப்பினராக பதவி வகித்து வந்த வீரன் மீண்டும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 16/3/24 தொடங்கி 15/3/2026ஆம் ஆண்டு வரையில் நகராண்மைக்கரக உறுப்பினராக நில வரைவு மற்றும் லைசென்ஸ் பிரிவுக்கு நகராண்மைக்கழக உறுப்பினராக சேவையாற்றி வருகிறார்.


ம.இ.காவில் 19 வயதில் ஈடுபாடு கொண்டுள்ள வீரன் கிளை, தொகுதி, மாநில அளவில் இளைஞர் பகுதி பதவிகளை வகித்து தற்போது ம.இ.கா தைப்பிங் தொகுதி தலைவராக இருந்து வருகிறார். தற்போது மாநில ம.இ.கா உச்சமன்ற உறுப்பினராகவும் தேசிய ம.இ.காவில் மத்திய செயலவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
தம் மீது நம்பிக்கை வைத்து நகராண்மைக்கழக உறுப்பினராக சேவையாற்ற வாய்ப்பு வழங்கிய ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மாநில தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோருக்கு வீரன் முனியாண்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



