Malaysia

மீபாவின் தேசிய அளவிலான தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி இளம் வீரர்களின் வெற்றி

பினாங்கு,டிச.9-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தினர் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் இவ்வாண்டுக்கான போட்டி பினாங்கு யூஎஸ்எம் பல்கலைக்கழக கோபா அரங்கில் (Kopa,USM) நடைபெற்றது.

கிட்டத்தட்ட 80 அணிகளைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் போட்டி இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் களமாக அமைந்துள்ளதால் நமது வால்புரூக் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெண் மாணவர்கள் கலந்து கொண்டு 3-வது நிலையில் வெற்றிப் பெற்றது நாம் அனைவருக்கும் மேலும் பெருமைக்குரியதாகும்.

மேலும் கால்பந்து துறையில் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரவும், பள்ளி தலைமையாசிரியர், திரு.நந்தகுமார் அவர்களுடன் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து பாடுபடும்.

ஆக, முழு விளையாட்டுத் திறனுடன் செயல்பட்ட அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் இப்போட்டியில் கலந்து கொண்டு அல்லும் பகலும் உழைத்த அனைவருக்கும், அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கு
வாழ்புரூக் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button