
“உங்கள் குரலாக, செயல்வீர்ராக மத்திய செயலவையில் இருப்பேன்” எண் 34 வேட்பாளர் டத்தோ தமிழ்வாணன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்ர,ஜூலை 5-
எத்தனை அரசியல் சுனாமி வந்தாலும் எதிர்கட்சிகள் மிரண்டு போகும் அளவிற்கு வலிமை பொருந்திய கட்சியாக வீற்றிருக்கும் ம.இ.கா என்ற தாய்க்கட்சியில் இணைந்து சேவையாற்றுவதை தாம் பெருமையாக கருதுவதாக மத்திய செயலவை வேட்பாளர் டத்தோ சு.தமிழ்வாணன் கூறினார்.
இந்த சூழலில் இது எப்படி சாத்தியம் என சிந்திப்பற்குள் தற்பொதைய தலைமையக நிலத்தில் மூன்று தொகுதி கட்டடங்களை கொண்ட வானுயர்ந்த கட்டிடங்களை கட்டுவற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
இதுதான் ம.இ.கா என்பதை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள தலைமை பீடத்தை அலங்கரிக்கும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரின் ஆற்றலை கண்டு பிரத்திப் போயிருப்பதாக டத்தோ தமிர்வாணன் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அவர்களுடன் இணைந்து சேவையாற்ற முனைந்துள்ளேன். ம.இ.கா இளைஞர் பிரிவின் தொடங்கிய எனது அரசியல் வாழ்க்கை இன்று தம்மை மத்திய செயலவைக்கு போட்டியிட வைத்துள்ளதாக டத்தோ தமிழ்வாணன் சொன்னார்.
இந்நிலையில் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆசியோடும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அரவணைப்போடும் களத்தில் இறங்கியிருக்கிறேன். உங்களின் மகத்தான ஆதரவை நாடி மத்திய செயலவை உறுப்பினருக்கு போட்டியிடுகிறேன்.
நமது கட்சியான ம.இ.கா ஒரு ஆலமரம். எத்தனை இடர் வந்தாலும் எழுந்து நிற்கும் ஆற்றல் கொண்டது ம.இ.கா. ம.இ.கா தலைமைத்துவத்தை பின்பற்றி அனைவரும் தத்தம் தொகுதிகளில் சேவையாற்றி வருகின்றனர். அவ்வழியே நானும் இருக்கும் நிலையில் சொல் வீரராக இல்லாமல் செயல்வீரராக செயல்பட மத்திய செயலவைக்கு போட்டியிடுவதாக டத்தோ தமிழ்வாணன் கூறினார்.
ம.இ.கா கட்சித் தலைமையோடு இணைந்து பணியாற்ற அனைத்து பலத்தோடும் நான் தயாராக இருக்கிறேன். நம்புங்கள். மத்திய செயலவை வேட்பாளரான எனது எண் 34. எனக்கு வாக்களித்து ஆதரவு தெரிவியுங்கள். உங்கள் குரலாக, செயல்வீரராக மத்திய செயலவையில் இருப்பேன் என்று டத்தோ சு.தமிழ்வாணன் சூளுரைத்துள்ளார்.



