
Malaysia
பேராக் மஇகா சேவை மையம் திறப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ டிச .21-
பேராக் மஇகா சேவை மையம்
இனி ஒவ்வொரு நாளும் காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை செயல்ப்படும்
என்று அதன் தொடர்பு குழுத் தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி சொன்னார்
24 தொகுதி தலைவர்களிடத்தில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பின்
பேசிய அவர் தற்போதைய மஇகா கிளைத் தலைவர்கள்
தங்களின் கிளைக்கான புதிய
உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டினார்
புதிய கிளைகளை அதிகம் தோற்றுவிக்க உத்வேகம் பிறந்துள்ளதாக சொன்ன அவர் இனி வரும் காலங்களில் ஊராட்சி மன்றம் மற்றும் இதர பதவிக்களுக்கான
சிபாரிசுகள் முறையே பரிசீலித்து நியமனம் செய்யப்படும்
என்றார்



