Malaysia

இந்திய மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி பாடுபடுவேன் டத்தோ நெல்சன் உறுதி

கோலாலம்பூர்,ஜூன் 26-
இந்திய மாணவர்களின் கல்வித் தகுதி எப்படி இருந்தாலும் அவர்களின் எதிர்கால நலனுக்கு தம்மால் பாடுபட முடியும் என்று ம.இ.கா கல்விக்குழு தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் எஸ்பிஎம் தேர்வில் நன்கு தேர்ச்சி பெற்ற வசதி குறைந்த மாணவர்களுக்கு மருத்துவம், மருந்தகம், பல்மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிக்க உதவி வழங்க தயாராக இருப்பதாக டத்தோ நெல்சன் தெரிவித்தார்.

அதேநேரத்தில் கல்வியில் பின்தங்கிய அல்லது தோல்வியடைந்த மாணவர்களுக்கு TVET எனும் தொழில்கல்வி படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வாய்ப்புகள் பெற்றுத்தர முடியம். இதற்கு தமக்கு உதவித் தலைவருக்கான பதவி அதிகாரம் இருந்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் 3 எண்ணில் போட்டியிடும் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி டத்தோ நெல்சன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button