
Tropicana Gardens Mall பேரங்காடியில் Convention Centreஇல் உலகதரம் வாய்ந்த மிகப்பெரிய தீபாவளி விற்பனை சந்தை… மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த Colours of India நிறுவனம் நடத்துகிறது
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
பெட்டாலிங் ஜெயா செப்.11-
நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே தீபாவளி உள்ளிட்ட பல்வேறு விற்பனை சந்தைகள் நடத்தி முத்திரை பதித்து வரும் Colours of India நிறுவனம் தற்போது உலகத்தரம் வாய்ந்த மிகப்பெரிய அளவில் தீபாவளி விற்பனை சந்தையை கோத்தா டாமான்சாராவில் நடத்தி வருகிறது.
மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள
Colours of India நிறுவனம் செப்டம்பர் 11 தொடங்கி 16 வரையில்
Tropicana Gardens Mall பேரங்காடியில் Convention Centreஇல் உலகதரம் வாய்ந்த மிகப்பெரிய தீபாவளி விற்பனை சந்தையை நடத்தவுள்ளது.

Colours of India நிறுவனம் அண்மையில்
ஜொகூர் பாரு sutera Mall பேரங்காடியில் மிகப்பெரிய தீபாவளி விற்பனை சந்தையை நடத்தி மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து முத்திரை பதித்துள்ளது. இந்த தீபாவளி விற்பனை சந்தையில் மொத்தம் 217 கடைகள் போடப்பட்டன. இந்நிலையில் கோத்தா டாமான்சாராவில் இந்த மாபெரும் விற்பனை சந்தை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை சந்தை கடைகளில் டெக்டைல்ஸ், உணவு வகைகள், பலகார வகைகள், அணிகலன்கள், மலிகை பொருட்கள் என்று பல்வேறு இந்திய பாரம்பரிய பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று அதன் உரிமையாளர் சத்திய குமரன் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்த விற்பனை சந்தை துறையில் கடந்த 2018 தொடங்கி சிறிய அளவில் ஈடுபட்டு வந்த கலர்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் இன்று நாடு தழுவிய நிலையில் மிகப்பெரிய அளவில் விற்பனை சந்தை கடைகளை ஏற்பாடு செய்யும் முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையில்லை.
இந்த Colours of Indiaவின் உலகத்தரம் வாய்ந்த மிகப்பெரிய மாபெரும் விற்பனை சந்தைக்கு இந்திய பெருமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று சத்தியா அழைப்பு விடுத்துள்ளார்.
Colours of India நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கு அதன் நிறுவனர் சத்தியா மற்றும் அவரது மனைவி மோகன செல்வி மிகப்பெரிய காரணமானவர்களாவர். வர்த்தகத்தில் தொடர்ந்து போராடினால் வெற்றிக்கனிகளை எட்டிப் பிடிக்க முடியும் என்பதற்கு சத்தியா- மோகன செல்வி தம்பதியர் மிகப்பெரிய உதாரணமாகும் என்றால் அது மிகையில்லை.



