Malaysia

சிங்கப்பூரின் முதல் அதிபரின் துணைவி நூர் ஆயிஷா காலமானார் மலேசிய பிரதமர் அன்வார் இரங்கல்!

சிங்கப்பூர்,ஏப்.22-
சிங்கப்பூரின் முதல் அதிபராக இருந்த யூசோஃப் இஷாக்கின் மனைவியும், மகளிருக்கு முன்னோடியான சமூக தூணாகத் திகழ்ந்த நூர் ஆயிஷா முஹம்மத் சலீம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91 ஆகும்.

நூர் ஆயிஷா சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அதிகாலை 4.28 மணிக்கு இறைவனடி சேர்ந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது முகநூல் பதிவு மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

“யூசோஃப் இஷாக்கின் பக்கபலமாக, நூர் ஆயிஷா அவர்கள் சிங்கப்பூர் மகளிருக்கு ஒரு தாராளமான உதாரணமாக இருந்தார். சமூகத்தில் அவருடைய பங்களிப்பு வரலாற்றில் நிலைத்திருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், மலேசியர்கள் சார்பாக சிங்கப்பூர் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button