
தன்னம்பிக்கையோடு போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் மாணவர்களுக்கு தொழிலதிபர் கலைமணி வாசு ஆலோசனை
கிள்ளான்,ஆக.1-
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு விடாமுயற்சி அவசியம். தன்னம்பிக்கையோடு போராடினால் கண்டிப்பாக இலக்கை அடைய முடியும் என்று கலைமணி வாசு கூறினார்.
மாணவர்கள் நம்பிக்கையோடு தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தங்கள் செயல்திறனை அறிந்து திட்டமிட்டு செயல்பட்டால் கண்டிப்பாக வாழ்க்கையில் சிறந்த நிலையில் வெற்றி பெற முடியும் என்று போர்ட்கிள்ளான், பண்டார் பாரு இடைநிலைப்பள்ளியில் தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் கலைவணி அவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் பலர் வர்த்தகத்தில் தோல்வியடைவதற்கு முதல் காரணம் விளைவுகளை தைரியத்தோடு அணுகி சமாளிக்க வேண்டும். அதன்பிறகு நல்ல திட்டமிடல் இருக்க வேண்டும். நம்மால் முடியும் எனும் சிந்தனையில் தன்னம்பிக்கையோடும் நம்பிக்கையோடும் சென்றால் வெற்றி பெற முடியும் என்று கலைவணி சொன்னார்.
போர்ட்கிள்ளான், பண்டார் பாரு இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தைரியமானவர்கள். உங்களால் நினைத்ததை சாதிக்க முடியும் எனும் வேட்கையோடு செயல்பட்டால் கண்டிப்பாக சாதிக்கலாம் என்று கலைமணி வாசு தமதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
போர்ட்கிள்ளான், பண்டார் பாரு இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் புவான் ஹாஜா ஹஸ்லின், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



