Malaysia

MS GOLD நகைக்கடையின் 4ஆவது கிளை ஜொகூர் பாருவில் திறப்பு விழா கண்டது டத்தோ மாலிக்கின் திறந்து வைத்தார்

ஜொகூர் பாரு, ஆக. 26- தங்க ஆபரணங்கள் துறையில் தனித்துவமான பாதையில் முத்திரை பதித்து வரும் MS GOLD நிறுவனம் தனது 4ஆவது கிளையை ஜொகூர் பாருவில் திறந்துள்ளது. டத்தோ மாலிக் அவர்களின் தாயார் இந்த எம்.எஸ் கோல்ட் நிறுவனத்தின் 4ஆவது கிளையை அதிகாரப்பூர்வமாக
திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா டத்தோ மாலிக் மற்றும் அவரது தாயார் தலைமையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. புதிய கிளை எண் 18, ஜாலான் Titiwangsa 3/2 தாமான் தம்போய் இண்டா, 81200 எனும் முகவரியில் அமைந்துள்ளது.

கடந்த 2022இல் தனது நகைகடை பயணத்தை தொடங்கிய எம்.எஸ். கோல்ட் நிறுவனம் தனது முதல் நகைக்கடையை 2023ஆம் ஆண்டு தொடங்கினார். அன்று தொடங்பிய MS GOLD நிறுவனம் இன்று 4ஆவது கிளையை திறந்து பீடுநடை போட்டு வருகிறது.

MS GOLD நிறுவனம் சரியான விநியோகிப்பாளர்கள் நேர்த்தியான நகை டிசைன்கள், இடங்கள் தேர்வு மற்றும் தங்கநகை துறையில் உள்ள அனுபவம் மற்றும் திறமையைக் கொண்டிருப்பதால் MS GOLD நிறுவனம் இன்று சிறந்து விளங்குகிறது.

MS GOLD நிறுவனத்தில்
அனுபவமுள்ள சிறந்த பணியாளர்களை கொண்டுள்ளது. MS GOLD நிறுவனம முதல் கிளை ஏப்ரல் 1ஆம் தேதி 2023இல் மஸ்ஜித் இந்தியாவில் திறக்கப்பட்டது. அதே பகுதியின் முதல் கடைக்கு 300 மீட்டர் தூரத்தில் 2வது கிளை 5ம் ஜூலை 2023 அன்று திறக்கப்பட்டது.

MS GOLD நிறுவனத்தின் 3ஆவது கிளை சிரம்பானில் பிப்ரவரி 1 2024இல் திறக்கப்பட்டது.
MS GOLD நிறுவனம் விரிவாக்க திட்டங்களில் கவனம் செலுத்தி தங்கத்தை மொத்தமாக வாங்குவது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட நடவடிக்களைகளில் ஈடுபட்டு வருகிறது.

MS GOLD நிறுவனம் தனது நகைகடைகளை மேலும் விரிவாக்கங்கள் செய்ய அதன் நிறுவனர் டத்தோ அப்துல் மாலிக் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். இதில் முக்கியமாக வாடிக்கையாளர்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை MS GOLD நிறுவனம் வழங்கியுள்ளது.

போட்டிகள் நிறைந்த தங்க ஆபரணங்கள் துறையில் தமக்குள்ள அனுபவங்களை கொண்டு மனஉறுதியுடன் ஈடுபட்டதால் நான்காவது கிளைக்கு உரிமையாளராகி இருக்கிறார் டத்தோ அப்துல் மாலிக்.

நான்காவது கிளையை தொடங்கியுள்ள டத்தோ அப்துல் மாலிக் மேலும் பல கிளைகளை திறக்க தேசம் ஊடகம் வாழ்த்துகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button