Malaysia

தவித்த வாய்க்குத் தண்ணீர்!!! அரவிந்த் அப்பளசாமி எடுத்த அதிரடி நடவடிக்கையால் லங்காவி வாழ் இந்தியர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

லங்காவி,ஆக.25-
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடியின் இந்திய நலன்சார் அதிகாரி அரவிந்த் அப்பளசாமி எடுத்த அதிரடி நடவடிக்கையால் லங்காவி வாழ் இந்தியர்களின் குடிநீர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்பட்டது.

இந்த தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முதல் கட்டமாக மூன்று நீர் சேமிப்பு தொட்டிகள் நிறுவப்பட்டன. இந்த தண்ணீர் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கான மொத்த செலவு முப்பதாயிரம் வெள்ளிக்கும் கூடுதலாகும் என்று அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

இந்த ஒவ்வொரு தொட்டியிலும் எண்ணாயிரம் லீட்டர் வரையில் நீரை சேமிக்க முடியும். இந்த நீர் தொட்டிகளை பயன்படுத்தி அங்கு
தூய்மையான நீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நீர்சேமிப்புத் தொட்டிகள் தொடக்கமாக தாமான் சுங்கை ராயாவில் அமைய பெற்றுள்ளன,

இந்த TAMAN SUNGAI RAYA, KAMPUNG BELANGA PECAH, KAMPUNG KISAP, KAMPUNG TELUK ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கிட்டத்தட்ட ஐயாயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது அவர்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். மேலும்
ஏனைய பகுதிகளிலும் நீர் சேமிப்புத் தொட்டிகள் கட்டப்படும் என அரவிந்த அப்பளசாமி உறுதியளித்துள்ளார்.

இந்த தண்ணீர் பிரச்சினை தொடர்பில் தாமான் சுங்கை ராயா இந்திய குடியிருப்பாளர்களுடன்நடைபெற்ற கலந்துரையாடலில் அர்விந்த் பங்கேற்றார்.
கல்வி, பொருளாதாரம், சமூகம் ஆகிய நிலைகளில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button