Malaysia

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலய கார் நிறுத்துமிடத்திற்கு நிலம் வழங்குங்கள் சுகாதார அமைச்சரிடம் டத்தோஶ்ரீ சரவணன் கோரிக்கை

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்

கோலாலம்பூர்,ஜூன் 26-
கோலாலம்பூர் நகரில் மிகவும் பழமை வாய்ந்த அதேநேரத்தில. புகழ்ப்பெற்ற ஆலயமாக கருதப்படும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலயம் எதிர்நோக்கி வரும் கார்நிறுத்துமிட பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆலயத்தின் அறங்காவலர் டத்தோ எம்.சரவணன் கூறினார்.

இந்த திருமுருகன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே
போவதால் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருவதால் ஆலயத்திற்கு கார் நிறுத்துமிடம் அமைப்பதற்கு சுகாதார அமைச்சு நிலம் ஒதுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மட்டை சந்திந்த போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இதனை தெரிவித்தார்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலயத்தின் கார் நிறுத்துமிட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டி கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது தொடர்பில்
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் தேசிய தடயவியல் மையத்தின் கட்டுமான தளத்தை பார்வையிட வந்த அமைச்சர் ஜூல்கிப்ளி
ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போது ஜூல்கிப்ளியிடம் டத்தோஶ்ரீ எம். சரவணன் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பில் கார்நிறுத்துமிட பிரச்சினைகள் குறித்து ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அமைச்சரிடம் விவரித்தார். இந்த சந்திப்பில் ஆலயத் தலைவர் டத்தோ சுரேஸ் தலைமையில் ஆலய நிர்வாகத்தினர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button