Malaysia

அக்மாலின் விமர்ச்சனம் ஒருதலைபட்சமானது Dr சத்தியப் பிரகாஷ் கருத்து

கோலாலம்பூர்,ஜூன் 25-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிர்வாகத்தின் மீதான அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மலின் விமர்சனம் ஒருதலைபட்சமாக இருப்பதாக பிகேஆர் கட்சியின் துணை பொது செயலாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் கூறியுள்ளார்.

அக்மால் ஒற்றுமை அரசாங்கத்தின் உணர்வை பிரதிபலிக்கவில்லை.
ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கும்போது நேர்மையாக இருக்க வேண்டும் என்று அக்மலை டாக்டர் சத்தியப் பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதை அரசாங்கம் தடுக்காது. இருப்பினும், அனைவரும் அரசாங்கத்தின் முடிவுகளுடன் உடன்பட வேண்டும். அம்னோ தலைவர்கள் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

சுயவிளம்பரத்திற்காக நேர்மையற்ற விமர்சனங்களை முன் வைப்பதை அக்மால் தவிர்க்க வேண்டும்.
மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் பங்குகளை உலகளாவிய உள்கட்டமைப்பு கூட்டாளருக்கு விற்க அரசாங்க முயற்சிகள் குறித்து அக்மல் விமர்சித்ததை சத்தியப் பிரகாஷ் சாடினார்.

வெளிநாட்டில் செயல்படும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் அரசு உறவை துண்டித்தால் மலேசியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்த கருத்து குறித்து அக்மல் கேள்வி எழுப்பி இருந்தது்தொடர்பில் டாக்டர் சத்திய பிரகாஷ் கருத்துரைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button