
ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரை விமரிசையாக நடந்தேறியது இந்திய மாணவர்களை கல்வியில் முன்னோக்கி நகர்த்த உந்து சக்தியாக திகழும்
பத்துமலை, ஆக 5-
இந்திய மாணவர்களை கல்வியில் முன்னோக்கி நகர்த்த உந்து சக்தியாக இருப்பதற்கு பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது
இந்த கல்வி யாத்திரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். கடந்த 42 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்திய மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி வருகிறது என்றால் அது மிகையில்லை.
இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக கல்வி யாத்திரை விளங்கி வரும் நிலையில் 30ஆவது கல்வி யாத்திரை ஞாயிற்றுக்கிழமை பத்துமலையில் பக்திநெறியோடு சிறப்பான முறையில் நடைபெற்றது.

அடைமழை என்ற சவாலைக் கடந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் இக்கல்வி யாத்திரையில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஸ்ரீ முருன் கல்வி நிலையத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குருமான டான்ஸ்ரீ தம்பிராஜா சிறப்புரையாற்றி கல்வி யாத்திரையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



