Malaysia

வெஸ்ட்கன்றி பாராட், ஜாலான் பூச்சோங் காஜாங்கில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் அன்னை நாகேஸ்வரி அம்பிகைக்கு நாகசதுர்த்தி விழா பக்தர்கள் கலந்து கொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு

காஜாங்,ஆக.5-
காஜாங் வெஸ்ட்கன்றியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் அன்னை நாகேஸ்வரி அம்பிகைக்கு 26ஆம் ஆண்டு நாகசதுர்த்தி விழா ஆகஸ்டு 8ஆம் தேதி வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நாகசதுர்த்தி விழாவை முன்னிட்டு அன்றைய தினம் அதாவது ஆகஸ்ட. 8ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு ஓமம் மற்றும் மகாஅபிஷேகம், மற்றும்108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து நண்பகல் 12.30 மணிக்கு மகேஸ்வர பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்திருவிழா நாளில் அன்றைய தினம் மாலையில் விஷேச ஓமத்திற்கு பிறகு பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஆலயம் நோக்கி வலம் வருவார்கள். அதன்பிறகு பக்தர்கள் சுமந்து வந்த பால்குடம் அன்னை நாகேஸ்வரிக்கு பால்குட அபிஷேகமும் மகாஅபிஷேகமும் நடைபெறும். அதன் பிறகு பக்தர்களுக்கு தேநீர் சிற்றுண்டி வழங்கப்படும் என்று ஆலய நிர்வாகம் தேசம் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.

நாகேஸ்வரி அம்பிகைக்கு நடைபெறும் நாகசதுர்த்தி விழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு நித்திய பூஜை நடைபெறும். அதன்பிறகு அன்னை நாகேஸ்வரி அம்பிகைக்கு சர்வஅலங்காரம் செய்யப்பட்டு சர்வ அலங்கார சுருபிணியாக பக்தர்களுக்கு காட்சி தருவாள்.

நாகேஸ்வரி அம்பிகைக்கு ராஜஉபசார பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு இவ்வாண்டிற்கான நாக சதுர்த்தி விழா இனிதே நிறைவு பெறும் என்று ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வெஸ்ட்கன்றி பாராட், ஜாலான் பூச்சோங் காஜாங்கில் அமைந்திருக்கும்
அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் அன்னை நாகேஸ்வரி அம்பிகைக்கு நடைபெறும் நாக சதுர்த்தி திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்த்த மக்களும் முன்னாள் தோட்ட மக்களும் பங்கேற்று அன்னை நாகேஸ்வரியின் திருவருளை பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புக்கு
01133242201
0123900710.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button