
தாமான் ரிஷா 1 பி கே.ஆர்.டி. கிந்தா மாவட்டம் ஏற்பாட்டிலான சாம்பியன் சமூகம் நிகழ்விற்கு குடியிருப்பாளர்கள் வரவேற்பு
ஈப்போ,ஆக.5-
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அந்த வகையில் குடியிருப்பாயர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்கும் சாம்பியன் சமூகம் நிகழ்வினை தாமான் ரிஷா 1 பி கே.ஆர்.டி. கிந்தா தாமான் ரிஷா குடியிருப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தினர்.
குடியிருப்பாளர்களுக்கு சுகாதார பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைக்கும் வகையிலான சுகாதார பரிசோதனைகள், டிங்கி காய்ச்சல் பற்றிய கண்காட்சி, என பல அங்கங்களை பங்கேற்றவர்கள் வரவேற்று கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர், பி.ஜெயபிகாஷ் தலைமையில் “செனாம் ரோபிக்” , கேள்வி பதில் நிகழ்வுகள் நடைபெற பங்கேற்பாளர்கள் பெரு ம் உற்சாகம் அடைந்தனர்.
தொடர்ந்து , சொக்சோ, தெக்குன் , எல்.பி.பி.கே.என் துறைகளை சார்ந்த விளக்கங்களும் அளிக்கப்பட்டன்.
இந்த நிகழ்விற்கு டாக்டர் தினேஷ்குமார் மிதிவண்டி வணங்கினார். அதனுடன் தனபாலன் மூக்குத்தியை குலுக்கு சீட்டு பரிசாக வழங்கினார்.
குடியிருப்பாளர்கள் ஜெயபாலன், வேலாயுதம், தனபாலன் லெட்சுமணன், பாவுசான், இராமசாமி , டத்தோ டாக்டர் பரமசிவம் உட்பட பலர் ஆதரவு வழங்கினர்.



