Malaysia

மலேசிய இந்து சங்கத்தில் காலியாக இருக்கும் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்குதான் டத்தோ மோகன் ஷான் போட்டியிடுகிறார்  தங்க கணேசன் திட்டவட்டம்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

பெட்டாலிங்ஜெயா, ஜூலை 12-

மலேசிய இந்து சங்கத்தில் காலியாக இருக்கும் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டுமே டத்தோ மோகன் ஷான் போட்டியிடுவதாக நடப்பு தலைவர் திரு.தங்க கணேசன் கூறினார்.

மலேசிய இந்து சங்கத்தில் 27 உச்சமன்ற உறுப்பினர்கள் பதவி இருக்கின்றன. இதில் மொத்தம் 10 இடங்கள் காலியாகி உள்ளது.

இந்த 10 இடங்களுக்கு தனது தலைமையில் டத்தோ மோகன் ஷான் உட்பட 10 பேர் போட்டியிடுவதாக தங்க கணேசன் தெரிவித்தார்.

இந்து சமய விவகாரத்தில் யாரும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுகிறான். இதனை தடுக்க வேண்டும். இதுவே தங்களின் நோக்கம் என்று தங்க கணேசன் சொன்னார்.

மலேசிய இந்து சங்கத்தின் பேராளர் மாநாடு மற்றும் தேர்தல் ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பலர் இந்து சங்கம் குறித்து தவறாக பேசி வருவதை தங்க கணேசன் சாடினார்.

மலேசிய இந்து சங்கத்தில் இருக்கும் பிளவுகளை களைந்து சங்கத்தை மேலும் வலுப்படுத்த தாங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இந்து சமயம் என்றாலே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக

மலேசிய இந்து சங்க தேர்தலில் தாங்கள் அனைவரும் போட்டியிடுவதாக தங்க கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button