Malaysia

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பை மீண்டும் அபகரிக்க மாட்டேன்!!!  தங்க கணேசன்தான் மீண்டும் தலைவர் டத்தோ மோகன்ஷான் திட்டவட்டம்

 

பெட்டாலிங்ஜெயா, ஜூலை 12-

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கு வரப்போவதில்லை என்று அதன் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷான் கூறினார்.

இந்து சங்கத்தின் தலைவராக தங்க கணேசன் மீண்டும் பொறுப்பேற்பார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், நான் கண்டிப்பாக தலைவர் பதவிக்கு வர மாட்டேன் என்று பெட்டாலிங் ஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோ மோகன் ஷான் அவ்வாறு தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்கத்தின் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்.

இதனால் மோகன்ஷான் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக போகிறார் என்றும் எனக்கு பதவி மோகம் அடங்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன.

மலேசிய இந்து சங்கத்தின் நலன்தான் எனக்கு முக்கியம். அச்சங்கம் எந்தவொரு சூழ்நிலையிலும் முடங்கி போய்விடக்கூடாது என்று டத்தோ மோகன் ஷான் சொன்னார்.

நான் மீண்டும் உச்சமன்றத்திற்கு மட்டும்தான் போட்டியிடுகிறேன். தலைவர் பதவிக்கு அல்ல. தனக்கு எந்தவொரு உள்நோக்கமும் இல்லை. எங்கள் அணி வெற்றி பெற்றால் நடப்பு தலைவர் தங்க கணேசன் தான் தலைவர் பதவியை வகிப்பார் என்று டத்தோ மோகன் ஷான் திட்டவட்டமாக கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button