InternationalMalaysia

தகவல், தொடர்பு அமைச்சின் சிறந்த சேவைக்கான விருது தகவல் துறை அதிகாரி ஷாமலரூபன் சுப்பையா உள்ளிட்ட 522 பேர் விருது பெற்றனர்

புத்ரா ஜெயா, மே 16-


சிறந்த தரம் வாய்ந்த பணியை வெளிப்படுத்திய அமைச்சு, துணை இலாகாக்கள், ஏஜென்சிகள் ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தகவல், தொடர்பு அமைச்சு சிறந்த சேவைக்கான விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

சிறந்த சேவைக்கான இந்த விருதுகளைதகவல், தொடர்பு அமைச்சின் 522 பணியாளர்கள் பெற்றனர். இவர்களுக்கு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் விருதுகளை எடுத்து வழங்கினார்.

தகவல் துறை அதிகாரி ஷாமலரூபன் சுப்பையா அமைச்சரிடமிருந்து சிறந்த சேவைக்கான விருதை இந்நிகழ்வில் பெற்றிருந்தார்.

ஆர்டிஎம், தகவல் துறை. இப்தார், பெர்னாமா, பினாஸ், ஜேகோம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இவ்விருதினை பெற்றனர். கொடுக்கப்பட்ட நம்பிக்கையை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டவர்களுக்கான தகவல் தொடர்பு அமைச்சின் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவையாளர்களுக்கான விருது வழங்கும் விழா அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்தாண்டு 671 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 522 பேருக்கு அவ்விருது வழங்கப்பட்டது. எஞ்சிய 149 பணியாளர்கள் சபா, சரவா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்களுக்கு அங்கு விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button