
கோல குபு பாரு இடைத்தேர்தல் வெற்றி…
ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆதரவில் உலு சிலாங்கூர் தொகுதி ஏற்பாட்டில் கெர்லிங்கில் விருந்து நிகழ்வு டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையேற்றார் பாப்பாராயுடு பங்கேற்றார்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோல குபு பாரு, மே 16-
கோல குபு பாரு இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ் வெற்றி பெற்றதை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆதரவில் உலுசிலாங்கூர் தொகுதி ஏற்பாட்டில் கெர்லிங்கில் உள்ள பிரபல சீன உணவகத்தில் விருந்து நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்தேறியதாக உலுசிலாங்கூர் தொகுதி தலைவர் Cikgu பாலா கூறினார்.

இந்த வெற்றிக் கொண்டாட்ட விருந்து நிகழ்வுக்கு ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்வை டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்று நிகழ்வை வழிநடத்தியதாக பாலா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் டத்தோஸ்ரீ சரவணன், பாப்பாராயுடு ஆகிய இருவரும் உரையாற்றினர். கோல குபு பாரு இடைத்தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் டத்தோஸ்ரீ சரவணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதில் பேசிய பாப்பாராயுடு இது அனைவருக்குமான வெற்றி என்று புகழாரம் சூட்டினார்.
இந்த விருந்து நிகழ்வில் ம.இ.கா தலைவர்கள், ஜசெக தலைவர்கள், பிகேஆர் தலைவர்கள் என்று கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து நல்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



