
MCMC உரிமம் இல்லாமல் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு 10 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 10 வருட சிறை சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்க தலைவர் சிவக்குமார் கோவிந்தசாமி பாராட்டு
MCMC உரிமம் இல்லாமல் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு
10 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 10 வருட சிறை
சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்க தலைவர் சிவக்குமார் கோவிந்தசாமி பாராட்டு

கோலாலம்பூர், மார்ச் 8- தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தில் திருத்தம செய்யப்பட்டதன் அடிப்படையில் 2025இன் படி, உரிமம் இல்லாமல் இயங்கும் சமூக ஊடக சேவை நிறுவனங்களுக்கு 10 லட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்ற தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது என்று இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்க தலைவர் சிவக்குமார் கோவிந்தசாமி பாராட்டியுள்ளார்.
இந்த புதிய சட்ட கடந்த 11 பிப்ரவரி 2025-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்கு 1 லட்சம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையில் இது வரவேற்கதக்க நடவடிக்கை என்று சிவக்குமார் கூறினார்.
“MCMC, சட்டத்தை மீறும் நிறுவனங்களின் முந்தைய புகார்கள், பொது தாக்கம் மற்றும் சட்ட முன்னெடுப்புகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் சுஹைய்மி அப்துல்லா கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு விளக்கமளித்திருந்தார்.
இந்த தொடர்ச்சியான மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையானது இணையத்தில் நிகழும் பல்வேறு குற்றங்களை தடுக்க உதவும். உரிமம் பெறாத நிறுவனங்களின் சேவைகளை தடை செய்ய MCMC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் வழி அது தொடர்பான குற்றல்களை துடைத்தொழிக்க முடியும் என்று சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது வீசாட், டிக்டாக் (1 ஜனவரி 2025) மற்றும் டெலிகிராம் (2 ஜனவரி 2025) உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன.
பயனர் தரவுகள் மற்றும் தனியுரிமையை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை செயல்படுத்துதல் உரிமம் பெறுவதற்கான முக்கிய நோக்கமாகும்.
மேலும் வெறுப்புணர்வூட்டும் உள்ளடக்கம், போலி செய்திகள் மற்றும் சூதாட்டத்தை கண்காணித்தல் போன்றவையும் அடங்கும் என்பதால் இணைய குற்றங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது என்று சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வருவாய் ஈட்டுவது மிகவும் சிறந்த நடவடிக்கை.
அமைச்சர் ஃபஹ்மி பட்சில் விடுத்த எச்சரிக்கை பல்வேறு எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
“சமூக ஊடக தளங்கள் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கானது மக்கள் பாதுகாப்பான டிஜிட்டல் முறையை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். மக்கள் நன்மைக்காகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியிருப்பது வரவேற்கதக்கது என்று ர். சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்க தலைவர் சிவக்குமார் கோவிந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.



