Malaysia

இணைய பாதுகாப்பு பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம்  MCMCயின் நடவடிக்கை பாராட்டதக்கது ஜெயராமன் பிள்ளை வரவேற்பு

இணைய பாதுகாப்பு பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம்

MCMCயின் நடவடிக்கை பாராட்டதக்கது

ஜெயராமன் பிள்ளை வரவேற்பு

கோலாலம்பூர், மார்ச் 8- திண்டர், கிரிண்டர், ஓமி போன்ற சமூக டேட்டிங் பயன்பாடுகளுக்கான ஒழுங்கற்ற இணைய தளங்களை மலேசிய அரசு தடைசெய்துள்ளது சிறந்த அணுகுமுறையாகும் என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயராமன் பிள்ளை வரவேற்றுள்ளார்.

இந்த முடிவு, இந்த பயன்பாடுகள் சமூக ஒழுக்கத்தை பாதிக்கும் செயல்பாடுகளுடன் இருப்பதால் எடுக்கப்பட்டது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) தெரிவித்திருந்தது.

கூகுள் ப்ளே, ஆப்பிள் ஸ்டோர் போன்ற தலங்களில் இவை இன்னும் கிடைப்பதால், உள்ளடக்க கண்காணிப்பு மூலம் விதிமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று MCMC மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் சிறந்த ஒன்று என்று ஜெயராமன் பிள்ளை தெரிவித்தார்.

“நாட்டின் மதிப்புகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை கண்டறிய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், பெற்றோர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியாது” என்ற கூற்று சரியானது என்று ஜெயராமன் சொன்னார்.

சமூக ஊடக அபாயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் “டேட்டிங் பயன்பாடுகள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டும்” என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியிருந்தார். இது பெற்றோர்களுக்கு சிறந்த அறிவுரை என்று ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மட்டத்தில் டிஜிட்டல் எழுத்தறிவு வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.”ஆன்லைன் பாதுகாப்பு” தகவல் மூலம் பொது விழிப்புணர்வை ஊக்குவிக்கலாம். குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

தவறான உள்ளடக்கத்தை MCMC-க்கு உடனடியாக புகாரளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது போன்ற சமூக ஆராய்ச்சியாளர்கள், “தடை மட்டுமே தீர்வு அல்ல. இளைஞர்களுக்கு நேர்மறையான டிஜிட்டல் நடத்தை கற்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.

கடந்த 2024-இல் 18+ தவறான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது வரை

70% புகார்கள் இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டிஜிட்டல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு இடையே சமநிலை அவசியம். இதற்கு அரசு, பெற்றோர் மற்றும் பள்ளிகள் கூட்டாக செயல்பட வேண்டும்” என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சங்க தலைவர் ஜெயராமன் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button