
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி 2024 -2026 பொறுப்புகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல்
கோலாலம்பூர்,செப்.7-
மலேசியத் தமிழ் ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. இதில் மூவர் போட்டியிடும் வேளையில் 2024 -2026 பொறுப்புகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது.
மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு அதன் முன்னாள் தலைவர் திரு.செ.வே.முத்தமிழ் மன்னன் 2ஆம் எண்ணில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஆர் .கோபி கிருஷ்ணா ஓன்றாம் எண்ணில் போட்டியிடுகிறார். தொடர்ந்து தயாளன் சண்முகம் எண் 3இல் போட்டியிடெகிறார்.
இந்நிலையில் சங்கத்தின் துணைத் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி நிலவுகிறது. தமிழென்ஸ் ஊடகத்தின்
காளிதாசன் தியாகராஜன் எண் 1இல் போட்டியிடுகிறார். தொடர்ந்து
பார்த்திபன் நாகராஜன் எண் 2இல் போட்டியிடுகிறார்.
மேலும் உதவித் தலைவர் பதவிக்கு
எம்.ரவி எண் 1இல் போட்டியிடும் வேளையில்
தரவின் குமார் எண் 2இல் போட்டியிடுகிறார்.
செ.வெங்கடேசா எண் 3இல் போட்டியிடும் வேளையில்
காளிதாசன் இளங்கோவன் எண் நான்கிலும்
எஸ். ஜீவராஜா ஐந்திலும் போட்டியிடுகின்றனர்.
மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21இல் காலை 9 மணிக்கு ஜெயபக்தி மண்டபத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



