
மலேசிய தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கத் தேர்தல்! செயலாளராக வெற்றி விக்டர், பொருளாராக கிரிஸ்ட், துணைச் செயலாளராக ஆர்.குணா போட்டியின்றி தேர்வு!
கோலாலம்பூர், செப்.7-
மலேசிய தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கத்தின் நடப்பு செயலாளர் தமிழ் லென்ஸ் தலைமை ஆசிரியர் வெற்றி விக்டர் 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல் 2ஆவது முறையாக பெர்னாமா கிரிஸ்ட் சின்னபன் பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த முறை போட்டியிட்டு துணைச் செயலாளராக வெற்றி பெற்ற மலேசிய நண்பன் நிருபர் ஆர்.குணா இந்த முறை துணைச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
10 செயலவை உறுப்பினர்களில்
9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அந்த 9 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் யோகேஸ்வரன்,
மூர்த்தி,ராமன் குட்டி,
கிருஷ்ணன்,பவளச்செல்வன்,காளிதாஸ் சுப்ரமணியம்,அமுதா லட்சுமணன்,விஜய லட்சுமி, சுந்தரேசன் முனுசாமி ஆகியோர் தேர்வு பெற்றனர்.
2024 – 2026 ஆண்டுக்கான தேர்தலை திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு. சுந்தர ராவ் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து வழி நடத்தினர்.
வேட்புமனுவை மீட்டுக்கொள்ள
5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது கடந்த 11.9.2024 நாளுக்குப் பிறகு வேட்பு மனு மீட்பு ஏற்றுக்கொள்ளப்படாது.
மலேசிய தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் மற்றும் 2024-2026 ஆண்டுக்கான
தேர்தல் 21.9.2024ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தலைநகர் விஸ்மா ஜெயபக்தியில் நடைப்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



