
நில அமிழ்வு இடத்தில் இருந்து விலகி டிக்டாக் செய்வதை நிறுத்துங்கள் போலிஸ் எச்சரிக்கை
கோலாலம்பூர்,செப்.6-
புதையுண்ட விஜயலட்சுமியை தேடும் பணிகள் நிறுத்தப்பட்ட போதிலும் அங்கு தொடர்ச்சியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் நில அமிழ்வு நிகழ்ந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ருஸ்டி இசா கடுமையாக எச்சரித்துள்ளார்.
நில அமிழ்வு நிகழ்ந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் அப் பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
அதே வேளையில் அப் பகுதியில் வீடியோ எடுப்பதையும் அனைவரும் நிறுத்த வேண்டும் என்று ருஸ்டி இசா கேட்டுக் கொண்டுள்ளார்.
எடுக்கும் வீடியோக்களை டிக் டாக்கில் பதிவேற்றம் செய்வதுடன் தேவையில்லாத விமர்சனங்களை செய்வதையும் அவதூறு பரப்புவதையும் அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டு மரணமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் போலிசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்று அவர் சொன்னார்



