
78ஆம் ஆண்டை நோக்கி ம.இ.கா… தலைமைத்துவ மாற்றம் கட்சிக்கு வலுசேர்த்து புதுத்தெம்பை கொண்டு வந்துள்ளது… ம.இ.காவை மக்கள் திரும்பி பார்க்க வைத்த தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்,
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,செப்.6-
ம.இ.கா மக்களுக்கு என்ன செய்தது என்பது பலரும் எழுப்பி. இது ஒரு அர்த்தமற்ற கேள்வி என்று சொல்ல வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையில்லை.
ம.இ.கா என்ற மாபெரும் தாய்க்கட்சியை பாராட்டியவர்கள் அதிகம் என்று சொல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இதில் குறிப்பாக நான் பெருமை கொள்கிறேன். காரணம் ஊடகத்துறையில் 35 ஆண்டுகள் பயணிக்கும் நான் ம.இ.காவின் வளர்ச்சியை நேரில் பார்த்தவன்்நான்.
ம.இ.கா 78 ஆண்டுகளைக் கடந்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதன் சாதனைகளை சொல்லி புரிய வைக்க வேண்டும் இந்த சமுதாயத்திற்கு…
கேள்வி கேட்பது தவறல்ல. மாறாக அந்த கேள்வி ம.இ.கா செய்த விஷயங்களை மறைக்கக்கூடாது என்பது நமது கருத்து. ம.இ.கா செய்த சாதனைகளை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்.
கல்விக்கு MIED-AIMST, தொழில்கல்விக்கு TAFE கல்லூரி, சமுதாய பிரச்சினைகளுக்கு மாநிலம், தொகுதி, கிளை தலைவர்கள் என்று இன்றளவும் மக்களுக்கான உதவிகள் கிடைத்த வண்ணம்தான் உள்ளன. துன் சாமிவேலு ம.இ.காவின் தேசிய தலைவராக இருந்த போது அவரது கட்டமைப்பில் உருவானது MIED கல்விக்கழகம். அதனூடே நிர்மாணிக்கப்பட்டதான் AIMST பல்கலைக்கழகம்..
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று மருத்துவர்கள் ஆகி உள்ளனர். வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்க வேண்டும் என்ற துன் சாமிவேலு அவர்களின் கனவு இன்று வீட்டுக்கு பல பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. ம.இ.காவினால் என்ன முடிந்தது என்று சொன்னவர்களுக்கு பேர் இடியாக விழுந்தது ம.இ.காவின் அபார வளர்ச்சி.
கடந்த 2008,2013, 2018 தேர்தலுக்குப் பிறகு ம.இ.கா சரிவு கண்டது உண்மைதான். ம.இ.காவின் முன்னாள் தலைமைத்துவம் செய்த பல தவறுகள் மக்களை முகம் சுளிக்க வைத்த போதிலும் 2018 தேர்தலுக்குப் பிறகு
ம.இ.காவை தாங்கிப் பிடித்த தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கட்சியை முறையாக வழிநடத்தியதின் பலனாக இன்று கட்சி பல மேம்பாடுகளையும் மாற்றங்களையும் கொண்டுள்ளது.
ம.இ.காவை முறையாக வழிநடத்தி அனைவரையும் அரவணைத்து இன்று ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
ம.இ.காவை மக்கள் திரும்பி பார்க்க வைத்த தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன். இதன்காரணமாகவே அவர் தொடர்ந்து கட்சியை தொடர்ந்து வழி நடத்த வேண்டும் என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியிருந்தார்.
ம.இ.காவை எப்படி வழிநடத்த வேண்டும்? என்ன செய்தால் கட்சி வலுப்பெறும் என்பதை நன்கு அறிந்தவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன். ம.இ.கா தலைமைத்துவத்தை வழிநடத்த சரியான தலைவர் என்பதால் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொடர்ந்து ம.இ.கா தலைமைத்துவத்தை வழிநடத்த வேண்டும் என்பது ம.இ.கா தலைவர்களின் கோரிக்கையாகும் என்பதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் எத்தனையோ மேம்பாடுகள். அதுவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்ணைத்தொடவிருக்கும் ம.இ.காவின் மூன்று கோபுரங்கள் ம.இ.காவில் வரலாறு பதிக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
துன் சாமிவேலு காலம் தொட்டு .ம.இ.காவிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. அதுவும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவம் பொற்காலம் என்கால் அது மிகையில்லை.



