Uncategorized

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விஜய் !!! செங்கோட்டையன் உறுதி!

தேசம் செய்திகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து எம். முருகன்

சென்னை,டிச.3- அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாள் என்று வர்ணிக்கப்படும் செங்கோட்டையன் அண்மையில் விஜய் கட்சியில் இணைந்தார். விஜய் தொண்டர்கள் இளைஞர்களாக இருக்கிறார்கள். அதிகமான உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகிறார்கள். அது பாராட்டுக்குரியது. நான் தவேகவில் இணைந்தவுடன் விஜய் கட்சிக்கு மக்கள் பெரிய ஆதரவை வழங்கி வருகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. எம்ஜிஆர் ஜெயலலிதா போல விஜய்யை முதல்வராக்க பாடுபடுவேன். அவரை ஆட்சியில் அமர செய்வேன். இன்னும் எங்கள் கட்சிக்கு பல முன்னாள் தலைவர்கள் வர உள்ளார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய் கட்சி இந்த தேர்தலில அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இது உறுதி. விஜய் தான் அடுத்த முதல்வர் என்று செங்கோட்டையன் உறுதியாகக் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button