
Malaysia
கோவில் இடமாற்றம் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சையாக கருத்து பதிவிட்டார் மத போதகர் சம்ரி வினோத்
கோலாலம்பூர்,மார்ச் 28-
பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று மத போதகர் ஜம்ரி வினோத் சர்ச்சையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை இடமாற்றம் செய்யும் விவகாரம் குறித்து அவர் செய்த பதிவு விவாதத்திற்குரியதாக இருந்தது என காவல்துறைத் தெரிவித்திருந்தது.
ஜம்ரி வினோத் பாடாங் பெசார் மாவட்ட காவல் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு பிறகு வெள்ளிக்கிழமை கங்கார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



