Malaysia

கறிவேப்பிலை ஒரு கிலோ 15 முதல் 18 வெள்ளி வரை விற்கப்படுகிறது. உண்மையில் அதன் விலை 1 வெள்ளிதான் சுயமாகவே கறிவேப்பிலையை வளர்த்து கொள்ளுங்கள் பினாங்கு பயனிட்டாளர் சங்கம் அறிவுரை

பினாங்கு,ஜன.19-
கறிவேப்பிலை கிலோவுக்கு 15 ரிங்கிட் முதல் 18 ரிங்கிட் வரை விற்கப்பட்டுவதால் பல இல்லத்தரசிகள் மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்பு 10.00 ரிங்கிட்டிற்க்கு விற்கப்பட்டது என அதன் கல்விப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

சில வியாபாரிகள் 100 கிராமுக்கு மவெ 1.00 விற்கின்றனர்.
ஒரு கட்டு என்ற அடிப்படையில் விற்கப்படுகின்றன.

சில நேரங்களில் இந்த கறிவேப்பிலை கிட்டத்தட்ட இலவசமாகவே தரப்பட்டது. ஆனால் இப்பொழுது இல்லை.
ஆனால் இப்போது ஒரு கிலோ மவெ 15 மற்றும் மவெ18 வரை விற்கப்படுவதாக சுப்பாராவ் கூறினார்.

“அடுத்த முறை நீங்கள் உணவகத்திற்குச் செல்லும்போது, ​​​​கறி அல்லது பிற இந்திய உணவுப் பொருட்களில் கறிவேப்பிலையை எதிர்பார்க்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவற்றை எண்ணிவிடலாம் என்றார் அவர்

சமீபத்தில் பி.ப.சங்கம் நடத்திய ஆய்வில், மவெ 2 முதல் மவெ 3 வரை சிறிய கட்டு அளவு கறிவேப்பிலைகள் கட்டப்பட்டு விற்கப்படுகிறது.
இது முன்பு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தரப்பட்டது.

நாமே கறிவேப்பிலை யை வளர்த்துக் கொண்டால் அதன் அடக்க விலை மவெ 1 மட்டுமே செலவாகும் என்றார் சுப்பாராவ்.

தேங்காய் பால் மற்றும் தேங்காய் விற்பனை செய்யும் தேங்காய் விற்பனையாளர்கள் கூட, பயனீட்டாளர்களுக்கு தேங்காய்களை வாங்கும் போது இனி கறிவேப்பிலையை இலவசமாக வழங்குவதில்லை.

தங்கத்தை விட விலை அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.
பயனீட்டாளர்கள் குறிப்பாக இல்லத்தரசிகள், தங்கள் சொந்த கறிவேப்பிலையை வளர்க்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும் இது எளிதில் பயிரிடக்கூடிய ஒரு செடியாகும் என்றார் சுப்பாராவ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button