Malaysia

மலேசிய அறிவுசார் தலைமுறை கூட்டமைப்பு இயக்கத்தின் ஒத்துழைப்பில் ம.இ.கா கோத்தா ராஜா தொகுதியின் பொங்கல் விழா இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை கொண்டு வரும்

கிள்ளான்,ஜன.19-
பொங்கல் திருநாளின் முக்கியத்துவம் குறிதது இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் விழா கிள்ளானில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இந்த பொங்கல் திருநாள் விழா இளம் தலைமுறையினருக்கு சென்று சேரவே இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கோத்தா ராஜா தொகுதி தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் தெரிவித்தார்.

உற்சாகமும், நல்லிணக்கமும் நிறைந்த சூழலில் சுற்றுவட்டாரப் பகுதிவாசிகள் ஒன்றுகூடி இந்த விழாவைக் கொண்டாடினர்.

மலேசிய அறிவுசார் தலைமுறை கூட்டமைப்பு இயக்கத்தின் ஒத்துழைப்பில்
ம.இ.கா கோத்தா ராஜா தொகுதியின் இந்த பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடங்கி 10 மணிவரையில் கிள்ளானில் உள்ள தொகுதியின் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் வழி வட்டார மக்கள் மத்தியில் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை உணர்த்துவதுடன் தமிழர் பாரம்பரியத்தின் ஒற்றுமை மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் என்று நம்புவதாக இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம்.அசோஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய கோத்தா ராஜா தொகுதி உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த பொங்கல் விழாவில் கலாசார நிகழ்ச்சிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்ற பாரம்பரிய போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்த கலாச்சார பன்முகத்தன்மையைப் பாராட்டுவதுடன், உள்ளூர் சமூகம் மற்றும் சமூகத் தலைவர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் இந்த நிகழ்வு உள்ளது.
ம.இ.கா தலைவர்கள் மற்றும் வட்டார மக்களின் எதிர்பார்ப்பை இந்த கொண்டாட்டம் உயிர்ப்பித்துள்ளதாக டத்தோ அசோஜன் சொன்னார்.

இந்த நிகழ்வில் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல். சிவசுப்ரமணியம், சிலாங்கூர் மாநில மஇகா பொருளாளர் டத்தோ ஏபி சிவம், அம்னோ கோத்தா ராஜா பிரிவின் துணைத் தலைவர் துவான் ரவூப் மொக்தார், அம்னோ கோத்தா ராஜா செயலாளர்
துவான் நசாரி, அம்னோ கோத்தா ராஜா தொகுதி தகவல் பிரிவு தலைவர் துவான் ஹம்டான், கோத்தா ராஜா தொகுதி மசீச துணைத் தலைவர் புவான் ஜெக்கி, தேசிய ஒற்றுமை சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button