
யார் தூற்றினாலும் யார் போற்றினாலும் ம.இ.கா தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு உதவும் கட்சியாக விளங்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சூளுரை
கோலாலம்பூர், ஜன.7-
யார் தூற்றினாலும் யார் போற்றினாலும் ம.இ.கா தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு உதவும் கட்சியாக விளங்கும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சூளுரைத்துள்ளார்.
வீழ்வது நாமாக இருந்தாலும்,
வாழ்வது நம் இனமாக இருக்க வேண்டும் என்பதால் நம்மிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஒற்றுமை இருந்தால்தான் நாம் வெற்றிபெற முடியும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் நம்மிடையே ஒற்றுமை வேண்டும் என்று சிப்பாங் தொகுதி மஇகாவின் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய போது டத்தோஸ்ரீ எம். சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.
சிப்பாங் தொகுதியில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சி பாராட்டத்தக்கது என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் குறிப்பிட்டுள்ளார்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



