Malaysia

பத்து எம்பி பிரபாகரன் மித்ரா சிறப்புக் குழுத் தலைவராக இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த பாடுபடுவார்

கோலாலம்பூர்,பிப்.7-

இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்துவதில் மித்ரா தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றுவதை புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மித்ரா சிறப்புக் குழுத் தலைவர் பத்து எம்பி பிரபாகரன் உறுதி செய்வார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் மித்ரா சிறப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக

பிரதமர் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரதமர் அன்வார் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் மித்ரா சிறப்புக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பிரதமர் துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மித்ரா எனப்படும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் சிறப்புக் குழுத் தலைவராக டத்தோ ஆர். ரமணன் ராமகிருஷ்ணன் பதவி வகித்து வந்தார். டத்தோ ரமணன் தற்போது தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரபாகரன் மித்ரா சிறப்புக் குழுத் தலைவராக நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எம்பி பிரபாகரனை அப்பொறுப்புக்கு நேரடியாக நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button