Malaysia

இரு பெண்கள் தாங்கிடும் சுமையை இருநூறு ஆண்களால் கூட சுமக்க இயலாது… தாயாக இருந்தவர்கள் தங்கையும் தமக்கையும்… அடியேனுக்கு வழங்கப்பட்ட இந்த Honorary Doctorate இவர்களுக்கே சமர்ப்பணம்… Dr லிங்கேஸ்வரன் மணியம்

கோலாலம்பூர்,பிப்.4-

இரு பெண்கள் தாங்கிடும் சுமையை இருநூறு ஆண்களால் கூட சுமக்க இயலாது… தாயாக இருந்தவர்கள் தங்கையும் தமக்கையும்… அடியேனுக்கு வழங்கப்பட்ட இந்த Honorary Doctorate இவர்களுக்கே சமர்ப்பணம்… Dr லிங்கேஸ்வரன் மணியம்

கலைத்துறையில் தன்னை ஒரு கலைஞனாக அடையாளப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் முத்திரை பதித்துள்ள பன்முகத்திறன் கொண்ட கலைஞன் லிங்கேஸ்வரனுக்கு அரசு விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால், என்ன UIPM எனும் UNIVERSAL INSTITUTE PROFESSIONAL MANAGEMENT சிறப்பு Dr பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

மலேசிய கலைத்துறையில் அனைவரும் அசந்து பார்க்கும் ஒரு கலைஞன். பிரமித்து பார்க்கும் ஒரு அறிவிப்பாளர். நிகழ்ச்சி தொகுப்பாளர். மக்களை சிந்திக்க வைக்கும் ஒரு சிந்தனையாளன். அரசியல்வாதி கிடையாது. ஆனால், அரசியல் பேசும் ஆளுமையாளன். ஒரு கலைஞனுக்கு கிடைத்த அங்கீகாரம் டாகடர் எம்.ஏ. லிங்கேஸ்வரன் மணியம்.

Dr லிங்கேஸ்வரன் மணியம் கால் பதிக்கும் எல்லாதுறையிலும் நட்சத்திரமாய் மிளிர்கிறார். புதிய இலக்குகளை நோக்கி பயணிக்கிறார். தன்னிடம் ஒப்படைக்கும் பொறுப்பை மெருகேற்றி அதனை திரும்ப படைக்கும் ஆற்றல் கொண்ட மலேசிய லிங்கேஸ்வரனுக்கு சரியான தருணத்தில் Dr பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கலைத்துறையில் தன்னை பிரபலமானவர் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், உண்மை அதுதான். உறுதியான பேச்சு, இறுதியான கருத்து, தைரியமான போக்கு, எதைப்பற்றியும் கவலைபடாத மனநிலை என்று இவரது குணாதிசயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

லிங்கேஸ்வரனின் தொடர்ச்சியான சுயவளர்ச்சிக்கான செயலாக்கங்களையும், சமூக சார்ந்த பல தன்னார்வ ஈடுபாடுகளை அங்கீகரித்து கடந்த ஆண்டு 2023, Britishpedia’வின் 5-வது பதிப்பில் இவரை பற்றியும் குடும்பம், பூர்வீகம், முன்னோர்கள், கல்வி, கலை கலாச்சாரம், இதுவரை இவர் பெற்ற பட்டங்கள், முறையான அங்கீகாரங்கள், விருதுகள், கொள்கை, முன்னோர் வழி வகுக்கப்பட்ட தர்மங்கள் என பல தகவல்கள் பிரசுரமானது.

இவரை பற்றிய செய்திகள் அறிந்திராத பலருக்கும் வியப்பூட்டும் வகையில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

நிதர்சன வாழ்க்கைக்கு தேவையான பல பயனுள்ள உலக நடப்பு செய்திகள் தொடங்கி அடிப்படை வாழ்வாதாரத்திற்கு உதவக்கூடிய பல தகவல்களை அறிந்து வைத்திருப்பவர். பல பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு இலவசமாக சமய சொற்பொழிவு, தன்னம்பிக்கை மற்றும் தன்முனைப்பு பேச்சுகள் என பல முறை தன்னால் இயன்ற அளவு இந்த சமூகத்தில் தன் பங்கை வகித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஒருசில தோட்டப்பற பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்கள் சிலருக்கு உதவியுள்ளார்.

இந்த லிங்கேஸ்வரன் அந்த லிங்கேஸ்வரன் குறித்து அடிக்கடி கூறுவது “சிவனுக்கு தெரிந்தால் போதும்” என்ற வார்த்தைதான்.
“என்னை வாழ்த்திக் கொண்டே இருப்போர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்: என்னை சந்தித்து பேசியவராய், முன்பின் சந்தித்திராதவராய் கூட இருக்கலாம். 13 வருடகால கலைத்துறையில் நாடகங்கள், திரைப்படங்கள், மேடை படைப்புகள், சமுதாய நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் படைத்திருக்கிறார்.

இப்படி பல அம்சங்களும், திறமைகளும், ஆளுமையும் கொண்ட கலைஞருக்கும் பல அங்கீகாரங்கள் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு மறுக்கப்பட்ட எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை, காரணம் அவைகளை விட தனக்கு இதுவரை கொடுக்கப்பட்ட அங்கீகாரங்களை பற்றியே பெரிதும் கருதுகிறார். “எனக்கு தகுதி இருக்கிறது என்பதற்காக பலர் எனக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் அதே வேளை என்னை கௌரவிக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை சிவனார் கண்டெடுக்கிறார்,

அப்படி அவர்களுக்கு அந்த தகுதி இல்லாப்பட்ஷத்தில் எனக்கு அங்கீகாரங்களை தர அவர்களே மறுக்கின்றனர், இதில் கவலையுற எனக்கு என்ன தேவை!? இது போன்ற சிந்தனைக் கூட சிலருக்கு அகம்பாவமாக தெரியும், என்ன செய்ய, சூட்டப்பட்ட பெயரே லிங்கேஸ்வரன்” என்றார்.

இப்படி பலமுறை தனக்கு விளைந்த தவிர்ப்புகளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தொடர்ந்து தன் கடமை, பணி, சமய, சமூக ஆர்வ தொண்டு, வியாபாரத்தில் கவனம் செலுத்தி வந்த லிங்கேஸ்வரனின் தொடர்ச்சியான சுயவளர்ச்சியை பாராட்டி சிங்கப்பூர் UIPM @ Universal Institute of Professional Management கடந்த ஜனவரி 31ஆம் தேதி இவருக்கு கௌரவ டாக்டர் விருது (Honorary Doctorate) வழங்கி கௌரவத்துள்ளது.

இந்த டாக்டர் விருது குறித்து லிங்கேஸ்வரன் என்ன சொல்கிறார்?
என்னுடைய “நான்* என்ற அடையாளம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அன்று நானே என் இயலாமைக்கும் அறியாமைக்கும் முழுமுதற் காரணகர்த்தா. அதீத சுட்டிதனம் தொடங்கி அதீத இரக்க குணத்தால் இழந்தவை பொன்னும் பொருளும் மட்டுமல்ல, மானமும் மரியாதையும்தான்.

அன்று நம்பிக்கையும் தைரியமும் நிலை குழைந்து போயிருந்த லிங்கேஸ்வரனை மட்டம் தட்டியது மாற்றார் மட்டுமல்ல, மார்பில் சுமந்தவர்கூடதான்.
நான் வேலையில்லாதிருந்த காலத்திலும் கூட என்னை சற்றும் தாழ்த்தி பாராது ஒரு அண்ணன் போல தாங்கிப்பிடித்தது என் தமக்கை Mona Moganamதான்.

வேலை நேர்காணலுக்கு கூட போக கையில் வருவாய் இல்லாது பலமுறை அக்காவிடம் கேட்டிருக்கிறேன். திருப்பி நானாக கொடுக்கும் வரை அவராய் வாய் திறந்து கேட்டதில்லை. நான் சம்பாதித்தாலும் இலக்கை சாதித்தாலும், ஒன்றுமில்லா நிலையிலும் என்றுமே நான் தம்பியாகவே இருந்திருக்கிறேன்.

அண்ணன் என்னமோ செய்கிறான், அது போக்கில் போய் முயற்சிக்கட்டும், தங்கையாக உடனிருந்து என்ன உதவி செய்ய முடியும் என்று பார்ப்போம் என எப்போதும் ஒரு தனிப்படை நிர்வாகம் என் தங்கை Rogani Klose.
வருமானம் ஈட்டி தந்தாலும் தராமல் போயிருந்தாலும் என் தட்டில் விழும் சாதத்திலும் கூட சத்தம் வந்ததில்லை, அன்று போல இன்றும் உட்கார்ந்த இடத்திற்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுக்கும் பாசம்.

பூமிக்கு தனியாய் போக பயமாக இருக்கிறது என்று சிவனாரிடம் அழுதேனோ புலம்பினேனோ, கருவறையின் முன்வரவாக அக்கா இச்சா சக்தியாகவும் எனக்கு அடுத்து பின்னே தங்கை கிரியா சக்தியாகவும் பிறப்பெடுத்து இன்றும் கோலாகளம் கொண்டாடும் விஷ்வமூர்த்தி நான்…

என் துன்பக் காலத்திலும் துயர கோபத்திலும், என்மேலான பலரது பொய் புரட்டுக்கும் குற்றச்சாட்டுக்கும் பொய் பழிச்சொல்லுக்கும் கூட என்றும் என்னை மயிரிழையிலும் விட்டுக்கொடுக்காதவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான்.

 

அடியேனுக்கு வழங்கப்பட்ட இந்த Honorary Doctorate அங்கீகாரம் இவர்களுக்கே சமர்ப்பணம்…
சத்தியமாகவே சொல்கிறேன், இரு பெண்கள் தாங்கிடும் சுமையை இருநூறு ஆண்களால் கூட சுமக்க இயலாது…
அது தாயாகவும் தாரமாகவும்தான் இருக்க வேண்டும் என்றல்ல,
தங்கையாகவும் தமக்கையாகவும் கூட இருக்கலாம் என்றார் DR M.A LINGKESVARAN

லிங்கேஸ்வரன் மணியம் மேலும் பல விருதுகள் பெற
அன்பு வாழ்த்துகளுடன்

குணாளன் மணியம், தேசம் ஊடகம்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button