Malaysia

மியன்மாரில் நிலநடுக்கம்: தாய்லாந்தில் வானளாவிய கட்டடம் சரிந்தது

பேங்காக்,மார்ச் 28-
பாங்காக் வட பகுதியில் கட்டடம் சரிந்த பகுதியில் மீட்பு பணியில் காவல் படையும் மீட்பு பிரிவினரும்
நிலநடுக்கத்திற்கு அடிக்கடி ஆட்படும் நாடுகளில் மியன்மாரும் ஒன்று; புவியமைப்பு-புவித்தட்டு அடிப்படையில் மியன்மார் இத்தகைய சிக்கல் வளையத்தில் அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மியன்மார் கடற்பகுதியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பக்கத்து நாடான தாய்லாந்தில் எழுப்பப்பட்டுவந்த 30 மாடி அரசக் கட்டடம் சரிந்தது. பாங்காக்கில் அரச அலுவலகங்களுக்காக கட்டப்பட்டு வந்த இந்த வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 43 தொழிலாளர்கள் சிக்கியதாக காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

நில அதிர்வால் உருக்குலைந்த நிலையில் உள்ள மியன்மார் நாட்டில் ஒரு பகுதி.
மியான்மரை மையமாகக் கொண்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, தாய்லாந்து தலைநகரின் வடபகுதியில் எழுப்பப்பட்ட இக்கட்டடம் சில நொடிகளில் சரிந்து உருக்குலைந்து, நொறுங்கிய அப்பளம் போலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button