Malaysia

எஸ்பிஎம் தேர்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்கள் மீண்டும் சாதனை!

பெட்டாலிங் ஜெயா: ஏப். 29-
2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியான வேளையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சிகளுடன் மீண்டும் மகத்தான சாதனையை பெற்றுள்ளனர்.

இந்த சாதனைகள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்துக்கும் இந்திய சமுதாயத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று துணை இயக்குனர் சுரேந்திரன் கந்தசாமி கூறினார்.

2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.
இந்த தேர்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

திவ்யாஷினி பாகன் 11ஏ, மோகனபிரியா சுப்பிரமணியம் 7ஏ, வாசுதேவன் சிவாநந்தா 7ஏ, மிர்ஷாலினி சுப்பிரமணியம் 7ஏ, கலையரசி முகுந்தன் 7ஏ, ரோஷன் 6ஏ, அஸ்மிதா ஜெகநாதர் 6ஏ பெற்றனர்.

இதே போன்று நாடு முழுவதும் பல மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றனர்.
இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சிறந்த மாணவர்களை கொண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்த சாதனையை புரியவில்லை.
மாறாக முன்கூட்டியே கல்வி போதனையுடன் பயிற்சிகளை நடத்துகிறது.

இது தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் சாதனைக்கு வெற்றியாக உள்ளது.
இந்த மாணவர்கள் அடுத்து உயர் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். குறிப்பாக இம்மாணவர்கள் மெட்ரிகுலேசன் வாயிலாக அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்வார்கள்.

அப்படி விண்ணப்பம் செய்யும் அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு சூழ்நிலையில் கல்வியில் இன ரீதியிலான பாகுபாடுகள் பார்க்கப்படக் கூடாது.
இது தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மிகப் பெரிய கோரிக்கையாகும்.

மேலும் மாணவர்கள் சிறந்த துறையை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
பெட்டாலிங்ஜெயா ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற எஸ்பிஎம் மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வில் சுரேன் கந்தா இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button