
Malaysia
மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் இந்திய வாக்காளர்கள் ஆதரவு வழங்குவார்கள் டத்தோஸ்ரீ பங்ளிமா அப்துல் அஜீஸ் நம்பிக்கை
குளுவாங், செப்.23-
மக்கோத்தா சட்டமன்ற தொகுதியில் உள்ள 5,000த்திற்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் உள்ளனர் தமக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புவதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ பங்ளிமா அப்துல் அஜீஸ் கூறினார்.
இந்திய வாக்காளர்களை முடிந்த வரை நான் சந்தித்து உள்ளேன். அவர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்திய மக்கள் என்றும் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டார்கள்.
ஆகையால், வரும் இடைத்தேர்தலில் அவர்கள் நிச்சயம் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புவதாக இந்திய மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ பங்ளிமா அப்துல் அஜீஸ் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



